தர்மபுரியில் கள்ளக்காதலனுடன் தான் செல்வேன்..இளம் பெண் பிடிவாதம்.. போலீஸ் தந்த ட்விஸ்ட்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேசித்ரா என்பவர் பென்னாகரத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது.இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். சித்ராவிற்கு சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த டிக்டாக் பயிற்சியாளருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆறு நாட்களுக்கு முன்பு சித்ரா மாயமானார். அவரை போலீசார் தேடிய நிலையில், காவல் நிலையம் வந்தார். அங்கு கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என இளம் பெண் பிடிவாதம் பிடித்தார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருமணத்தை மீறிய உறவு என்பது இன்று பல குடும்பங்களை நிலைகுலைய வைத்துள்ளது. திருமணமாகி கணவனை பிரிந்து வாழும் பெண்களே இந்த சிக்கலில் அதிகம் சிக்குகிறார்கள். ஆதரவாக இருப்பதாகவும் வரும் ஆண்களை, திருமணமே ஆகி இருந்தாலும் சில பெண்கள் திருமணம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் முறையாக விவாகரத்து செய்ய விரும்புவது இல்லை. இது தான் பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாகிறது, அதேபோல் திருமணம் ஆகி கணவனை பிரிந்து வாழும் பெண்கள் முறையாக விவகாரத்து செய்யாமல், வேறு ஒருவரை திருமணம் செய்வது என்பது பெரிய சிக்கலை உண்டாக்குகிறது. அப்படித்தான் தர்மபுரியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா (25). பென்னாகரத்தைச் சேர்ந்த ஒருவருடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர் இரு ஆண் குழந்தைகளின் தாயாக உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் டிக்டாக் நிகழ்ச்சிகளுக்காக இரு பெண்கள் உதவியுடன் பயிற்சி எடுக்கச் சென்றார்.

பிப்ரவரி 3-ம் தேதி, 'டிக்டாக் பயிற்சிக்குச் சென்று வருவதாக' பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியேறிய சித்ரா, 6 நாட்கள் வரை வீட்டுக்கு வரவில்லை. செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆனதால் அதிர்ச்சியுற்ற பெற்றோர், தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் போலீசார் சித்ராவைக் கண்டுபிடித்து, நேற்று தொப்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில், டிக்டாக் பயிற்சியாளருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாகத் தெரியவந்தது. சித்ரா, 'பெற்றோரிடம் செல்ல மாட்டேன், கள்ளக்காதலுடன் வாழ வேண்டும்' என போலீஸ் முன் தெரிவித்தார். இதை எதிர்த்து பெற்றோர், 'மகளை எங்களுடன் அனுப்புங்கள். அந்த பயிற்சியாளர் பல பெண்களை சீரழித்துள்ளார். பல பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக உள்ளது எனக் கூறி, போலீஸ் நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதனிடையே கணவனை பிரிந்து பல வருடமாக வாழ்ந்து வந்த சித்ரா கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என்று பிடிவாதமாக இருந்தாக கூறப்படுகிறது. அவருடன் சென்றால் வாழ்வேன்.. இல்லை என்றால் போக மாட்டேன் என்று பிடிவாதம் தொடர்ந்து பிடித்தாராம். சுமார் 1 மணி நேரம் நீடித்த இப்போராட்டத்தில், தொப்பூர் போலீசார் 'பெண்ணின் விருப்பப்படி மட்டுமே நடவடிக்கை எடுக்கிறோம்' என கூறினார்களாம். அத்துடன் சித்ராவை - இரு ஆண் குழந்தைகளுடன் கள்ளக்காதலின் தரப்பினருடன் காரில் அனுப்பிவைத்தனர்.
நீதி கேட்டு வந்த குடும்பத்தினர், மகளின் முடிவால் ஆடிப்போனார்கள். போலீசார் சித்ராவை காதலனுடன் அனுப்பி வைத்ததை ஏற்க முடியாது என்று விரக்தியுடன் சென்றார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications