"எக்ஸுடன்" நெருக்கம்.. "ஏய்ய்".. தட்டிக்கேட்ட கணவன்.. போட்டுத் தள்ளிய மனைவி.. தர்மபுரியில் "திடுக்"
தர்மபுரி: கல்லூரிக் காதலனுடன் நெருக்கமாக இருந்ததால் மனைவியை தட்டிக் கேட்ட கணவனை இருவரும் சேர்ந்து தீர்த்துக் கட்டிய சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் நரசிபுரம் கிராமம் அருகே உள்ள சுடுகாட்டில் சில தினங்களுக்கு முன்பு பாதி எரிந்த நிலையில் ஓர் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த சடலத்தின் முகம் கருகி இருந்ததால் இறந்தது யார் என போலீஸாரால் அடையாளம் காண முடியவில்லை.
இதையடுத்து, அவரது பேண்ட் பையை பரிசோதித்த போது அதில் முக்கால்வாசி எரிந்த நிலையில் ஆதார் கார்டு இருந்தது. அதிலும் அவரது புகைப்படம் எரிந்திருந்தது. ஆனால், ஆதார் எண் தோராயமாக அடையாளம் காணும் படி இருந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த கார்டில் உள்ள எண்ணை கம்ப்யூட்டரில் வைத்து சோதித்து பார்த்த போது அது, பென்னாகரத்தைச் சேர்ந்த டெம்போ டிரைவர் மணி (30) என்பவரின் ஆதார் அட்டை என்பது தெரியவந்தது.

கதறி அழுத அம்சவள்ளி
இதன் தொடர்ச்சியாக, போலீஸார் பென்னாகரத்துக்கு சென்று மணியின் மனைவியான அம்சவள்ளியிடம் (24) மணி எங்கிருக்கிறார் என விசாரணை நடத்தினர். அதற்கு அம்சவள்ளி, தனது கணவரை ஒரு வாரமாக காணவில்லை என்றும், அவரை தேடிதான் அலைந்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
அப்போது போலீஸார் அவரிடம், மணி இறந்துவிட்டதாகவும், யாரோ அவரை கொலை செய்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட அம்சவள்ளி கதறி அழுதுள்ளார்.

போலீஸாருக்கு சந்தேகம்
எனினும், அம்சவள்ளியின் நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை ரகசியமாக போலீஸார் கண்காணித்தனர். அப்போது அவர் கணவர் இறந்த துக்கம் சிறிது கூட இல்லாமல் அன்றாட வேலைகளில் ஈடுபட்டிருப்பதை போலீஸார் கவனித்தனர்.
இதையடுத்து, அவரை போலீஸார் நேற்று காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் முதலில் மழுப்பலாக பதிலளித்த அம்சவள்ளி, பின்னர் என்ன நடந்தது என்பதை போலீஸாரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:

கல்லூரிக் காதலனுடன் பழக்கம்
எனது கணவருக்கும், எனக்கும் திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. எங்களுக்கு இரண்டு வயதில் குழந்தை இருக்கிறது. டெம்போ டிரைவராக இருப்பதால் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தான் எனது கணவர் வீட்டுக்கு வருவார். இதனால் பல நாட்கள் தனிமையில் இருந்துள்ளேன். தனிமையில் இருந்து விடுபடுவதற்காக எனது கல்லூரிக் காதலன் சந்தோஷிடம் (25) போனில் பேச ஆரம்பித்தேன். தொடர்ந்து பேசி வந்ததால் சந்தோஷ் மீது எனக்கு ஈர்ப்பு வந்தது.

தீர்த்துக்கட்டினோம்
பின்னர் இருவரும் பல முறை தனிமையில் இருந்துள்ளோம். இந்த விஷயம் எனது கணவர் மணிக்கு அண்மையில் தெரியவந்தது. இதுகுறித்து அவர் என்னிடம் கேட்டு அடித்து உதைத்தார். மேலும், சந்தோஷ் உடனான பழக்கத்தை விட்டுவிடுமாறும் கூறினார்.
இதனால் சந்தோஷும், நானும் சேர்ந்து எனது கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். அதன்படி, கடந்த வாரம் நள்ளிரவு சந்தோஷும், அவரது நண்பர் லோகேஷும் எனது வீட்டுக்கு வந்து எனது கணவரை அடித்துக் கொன்றனர். பின்னர், அவரது உடலை நரசிபுரம் சுடுகாட்டுக்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இவ்வாறு அம்சவள்ளி கூறினார்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அம்சவள்ளி, அவரது கள்ளக்காதலன் சந்தேோஷ், அவரது நண்பர் லோகேஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications