19 வயதிலேயே எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. என் புருஷனால் 4 மாத குழந்தை போயிடுச்சு.. கண்கலங்க பேசிய கெனிஷா
சென்னை: நடிகர் ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தி மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஆகியோரைக் குறித்து கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, ரவி மோகனின் குடும்ப வாழ்க்கை சிக்கலுக்கு கெனிஷாவே காரணம் என்ற குற்றச்சாட்டு இணையத்தில் பரவியதால் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில் கெனிஷா இன்ஸ்டாகிராமில் சில வீடியோக்கள் வெளியிட்டு இருக்கிறார். அது வைரலாகி வருகிறது.

விவாகரத்து சர்ச்சை
ரவி மோகன் - ஆர்த்தி தம்பதிகள் தற்போது பிரிந்து வாழ்ந்து வந்தாலும் அவர்களின் விவாகரத்து இன்னும் சட்டரீதியாக முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையில், கெனிஷாவுடன் ரவி மோகன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது பல்வேறு சந்தேகங்களையும் விமர்சனங்களையும் தூண்டியது.
சமூக வலைதளங்களில் ஆர்த்தியை பற்றியும், கெனிஷாவை பற்றியும் கடுமையான கருத்துக்கள் பரவத் தொடங்கியதால், இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, கெனிஷா இனி ஆர்த்தி ரவி பற்றி அவதூறு கருத்துக்கள் வெளியிடக் கூடாது, ஏற்கனவே பதிவிட்ட பதிவுகளை நீக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிலர் தங்களின் பதிவுகளை நீக்கியதாகவும் தகவல்.
கெனிஷாவின் பதில்
எனினும், இந்த எச்சரிக்கைகளுக்குப் பிறகும் இணையவாசிகள் அமைதியாக இருக்கவில்லை. கெனிஷாவை குறிவைத்து தனிப்பட்ட முறையிலும் கீழ்த்தரமாகவும் விமர்சனங்கள் அதிகரித்தன. இதை தொடர்ந்து கெனிஷா வெளியிட்ட நீண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் தனது வாழ்க்கையில் சந்தித்த வேதனைகளை ஓபனாக பகிர்ந்துள்ளார். எனது பெயர் கெனிஷா... நான் எனது அம்மாவை 2013ஆம் ஆண்டு இழந்தேன்... அப்பாவும் 2017ஆம் ஆண்டு இறந்துவிட்டார்... நான் நான்காவது படிக்கும்போதே எனது உறவுக்காரர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டேன்...
சுமார் 18, 19 வயது இருக்கும்போது எனக்கு கல்யாணம் நடந்தது... அப்போது எனக்கு எதுவும் தெரியாது... திருமணத்திற்குப் பிறகு எனது கணவர் என்னை மிகவும் மோசமாக அடித்தார்... அதனால் எனது வயிற்றில் இருந்த நான்கு மாத குழந்தை இறந்துவிட்டது... எனது அடி வயிற்றில் இருந்து ரத்தம் வந்து கொண்டே இருந்தது... அந்த வலியில் இருந்து என்னால் வெளியே வரவே முடியவில்லை...
எனது அம்மா, அப்பா, குழந்தை என எல்லாரையும் இழந்துவிட்டேன்... அதன் பிறகு அந்த வாழ்க்கையில் இருந்து வெளியேறினேன்... நான் என்னை நான் மீண்டும் கட்டியெழுப்பிக்கொள்ளத் தொடங்கினேன்...
ஆமாம்... நான் பார்களில் பாடியவள் தான்... ஒரு இரவுக்கு 500 ரூபாய் கொடுத்தார்கள்... எனக்கு அது பெரிய விஷயம்... நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் அது... அதில் என்ன தவறு இருக்கிறது...?
என்னை பற்றி பேசுபவர்கள் பலருக்கும் அறிவே இல்லையா என்று தோன்றுகிறது... என்னை பற்றி எதுவெல்லாம் பேசுகிறீர்கள்... எனக்கு நான்கு ஐந்து குழந்தைகள் இருக்கிறது... நான் ஆண்டி... எனது அப்பாவை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு ரவி மோகனுடன் சுற்றிக்கொண்டு இருக்கிறேன் என்று எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்...
மேலும், ரவி மோகனை முதலில் சந்தித்த போது அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும், தன்னால் தெரபிஸ்டாக சில ஆலோசனைகள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அதன் பிறகு தான் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டதாகவும் அவர் விளக்கியுள்ளார்.
குழந்தை பற்றி உருக்கம்
"ஒரு குழந்தையை வயிற்றிலேயே இழந்த ஒருவர், இன்னொருவரின் குடும்பத்தை கெடுக்க நினைப்பாரா?" என்று கேள்வி எழுப்பிய கெனிஷா, தன்னுடைய வாழ்க்கையை குறிவைத்து பேசுபவர்கள் தங்களது வாழ்க்கையை கவனிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
கெனிஷா பின்னணி
கெனிஷா பிரான்சிஸ் பாடகியாக மட்டுமல்லாமல், தெரபிஸ்டாகவும் பணியாற்றி வருகிறார். பல மேடைகளில் பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை ஈர்த்துள்ளார். குறிப்பாக, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கோவில் விழாக்கள் மற்றும் கச்சேரிகளில் பாடியுள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது வாழ்க்கை அனுபவங்களையும், மனநல ஆலோசனைகளையும் பகிர்ந்து வருபவர். ஆனால் சமீபத்திய சர்ச்சைகள் அவரது பெயரை வேறு கோணத்தில் பேச வைக்கிறது.
இன்னும் அடங்காத சர்ச்சை
நீதிமன்ற உத்தரவு, வக்கீல் நோட்டீஸ், ரசிகர்கள் விமர்சனம், கெனிஷாவின் உணர்ச்சி வசப்பட்ட வீடியோ என இந்த விவகாரம் தினந்தோறும் புதிய திருப்பங்களை எடுத்து வருகிறது.
ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து விவகாரம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வரும்வரை இந்த சர்ச்சை அடங்குமா? அல்லது மேலும் பெரிதாகுமா? என்பது தற்போது சினிமா வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் அதிகமாக பேசப்படும் கேள்வியாக உள்ளது.
-
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை












Click it and Unblock the Notifications