சார் ஊர்ல பிரச்னை.. உடனே ஆக்சன் எடுத்து அசத்திய தர்மபுரி எம்பி செந்தில்குமார்.. மக்கள் பாராட்டு
Recommended Video
தர்மபுரி: தமிழகம் முழுவதும் மக்கள் குடிநீர் பிரச்னையால் தவித்து வருகிறார்கள். பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என போராட்டங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார், தருமபுரி அருகே உள்ள கிராமத்தில் தண்ணீர் டேங்க் உடைந்து உள்ளதாக டுவிட்டரில் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு உடனே நடவடிக்கை எடுத்து அசத்தி உள்ளார்.
நடந்து முடிந்த முடிந்த லோக்சபா தேர்தலில் தர்மபுரி தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் செந்தில்குமாரும், பாமக சார்பில் டாக்டர் அன்புமணியும் போட்டியிட்டனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்குமார் வெற்றி பெற்றார்.

தருமபுரி எம்பியாக உள்ள செந்தில்குமாருக்கு அவரது டுவிட்டர் பக்கத்தில், பொதுமக்கள் பிரச்னைகள் குறித்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.அதை அவர் நிவர்த்தி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டுவிட்டரில் ஒரு கோரிக்கை செந்தில்குமாருக்கு அண்மையில் வந்துள்ளது. அதில் தர்மபுரி அருகே வெங்கட்டம்பட்டியில் தண்ணீர் டேங்க் பழுதாகி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மக்கள் நேரில் முறையிட்டும், இதுவரை ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதியில் மக்கள் தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர் என கூறப்பட்டிருந்தது.
Spoke with the Clerk Ramesh and sorted out the nonfunctioning of the mini tank at Venkatampatty. New Water tank will be installed today and water from the tank can be utilised from tomorrow.😊🙏 pic.twitter.com/YipUsIB6Xt
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) June 13, 2019
இந்த டுவிட்டர் பதிவினை பார்த்த டாக்டர் செந்தில்குமார், வெங்கடம்பட்டி கிளர்க் ரமேஷிடம் தான் பேசி பழுதான டேங்கை அகற்றிவிட்டதாகவும், புதிய வாட்டர் டேங்க் இன்று அங்கு நிறுவப்படும் என்றும் அதில் தண்ணீர் நிரப்பப்படும் என்றும் நாளை முதல்(வெள்ளிக்கிழமை) பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் பதில் அளித்துள்ளார். இந்த பதிலை கேட்டு தர்மபுரி மக்கள் அவரை வெகுவாக பாராட்டி உள்ளனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications