Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இடுப்புக்கு கீழ் எதுவும் உணர்ச்சி இல்லாத மாணவன்.. வீல் சேர் வாங்க உதவும் தருமபுரி எம்பி

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: இடுப்பிற்கு கீழ் எந்த உறுப்புகளும் உணர்ச்சியில்லாத நிலையிலும் சாதிக்க துடிக்கும் மாற்றுத்திறனாளி மாணவனுக்கு பிரத்யேக சக்கர நாற்காலி வாங்க தருமபுரி எம்பி செந்தில்குமார் உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர். மாற்றுத்திறனாளியான இவருக்கு இடுப்புக்கு கீழ் எந்த உறுப்புக்கும் உணர்ச்சி கிடையாது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரக் கூட முடியாது.

இயற்கை உபாதைகள் வருவதை கூட அவரால் உணர முடியாது. சிறு வயது முதல் தாய் ஈஸ்வரியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். இவர் அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கணினி

கணினி

நன்றாக படிக்கும் ஜான் பீட்டருக்கு கணினி மீது அதீத ஆர்வம். வீட்டு வேலை செய்யும் ஈஸ்வரியின் மாத வருமானம் ரூ 6 ஆயிரம் மட்டுமே. இந்த ஊதியம் மகன் கல்விக் கற்கவும் வாழ்க்கை நடத்தவுமே சரியாகிவிடுகிறது. குழந்தையாக இருந்த வரை மகனை இடுப்பில் உட்காரவைத்தும் சைக்கிளில் உட்காரவைத்தும் பள்ளிக்கு அழைத்து சென்றார்.

6 ஆண்டுகள்

6 ஆண்டுகள்

ஆனால் ஜானின் உடல் எடை தற்போது கூடி வருகிறது. இதனால் அவருக்கு சக்கர நாற்காலி வாங்க பலரின் உதவியை கோரியுள்ளார். இவர்களது நிலையை அறிந்த போதி அறக்கட்டளையின் நிறுவனர் ஆனந்தி கடந்த 6 ஆண்டுகளாக ஜானுக்கு டயாபர் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்து வருகிறார்.

முயற்சி

முயற்சி

இந்த நிலையில் வீல் சேர் வாங்கவும் அவர் பல முயற்சிகளை எடுத்து வருகிறார். மக்கள் நன்கொடையின் மூலம் ரூ 1.1 லட்சம் வரை சேகரித்துவிட்டார் ஆனந்தி. ஆனால் வீல் சேர் வாங்க ரூ 2.4 லட்சம் தேவைப்படுகிறது. இதுகுறித்த தகவல் தருமபுரி எம்பியும் டாக்டருமான செந்தில்குமாருக்கு சென்றது.

பிரத்யேக வீல் சேர்

பிரத்யேக வீல் சேர்

உடனடியாக ஆனந்தியை தொடர்பு கொண்டு விசாரித்தார். இதையடுத்து மீத பணத்தை தானே தருவதாக உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்ட ட்வீட்டில் மாணவரின் ஆசிரியரை தொடர்புகொண்டு பேசியதில் 2.4 லட்சத்தில் ஒரு பிரத்யேக Wheelchair தேவை.

எம்பி செந்தில் குமார்

எம்பி செந்தில் குமார்

1.1 லட்சம் நன்கொடை தெரிந்தவர்கள் உதவி செய்துள்ள நிலையில் மீதம் உள்ள தொகையும் வந்து கொண்டே இருப்பதாக தெரிவித்தார். தொகையில் என்ன பற்றாக்குறை உள்ளதோ அதனை நான் #உதவிட_உறுதி_அளித்துள்ளேன் என்றார். தருமபுரி எம்பி செந்தில் குமார் பொதுவாகவே சமூகவலைதளங்கள் மூலம் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார். மருத்துவ உதவி, பொருளாதார உதவி, வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார். அவருக்கு நெட்டிசன்கள் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+