இதுதான் கர்மா! கணவனை கழற்றி விட்டு.. போலீசுடன் போன கோமதி! கிணற்றடியில் ட்விஸ்ட் வைத்த எஸ்ஐ ராஜாராம்!
தர்மபுரி: தர்மபுரி முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது ஒரு சம்பவம். இளம் பெண் ஒருவரைக் கொலை செய்ய முயன்றதாக காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கள்ளக்காதலியை இரவு நேரத்தில் பரிகார பூஜை செய்யலாம் என அழைத்துச் சென்று கொலை செய்ய முயன்ற நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் அந்த சார்பு ஆய்வாளரைக் கைது செய்துள்ளனர். காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்க வந்த பெண்ணைக் கள்ளக்காதலி ஆக்கிய சப்-இன்ஸ்பெக்டர் தற்போது அவரைக் கொலை செய்ய முயற்சிக்க காரணம் என்ன என்பது குறித்தான பரபரப்பு பின்னணி வெளியாகி உள்ளது.
தர்மபுரி அருகே வெண்ணாம்பட்டியைச் சேர்ந்தவர் 28 வயதான கோமதி. இவருக்கு 20 வயதில், அதாவது 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோமதி அவரைப் பிரிந்துள்ளார்.
தொடர்ந்து தனது பெற்றோர் வீட்டில் கோமதி குழந்தையுடன் வசித்து வந்திருக்கிறார். மனைவியும் குழந்தையும் பிரிந்து போனதால் ஆத்திரமடைந்த அவரது கணவர் அடிக்கடி பெற்றோரின் வீட்டுக்கு வந்து தகராறு செய்ததாகச் சொல்லப்படுகிறது.

தர்மபுரி சம்பவம்
இதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றிருக்கிறார் கோமதி. அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமிடம் புகார் கொடுத்திருக்கிறார். இனிமேல் கோமதியைத் தொல்லை செய்யக் கூடாது என அவரது கணவரிடம் எழுதி வாங்கிவிட்டு ராஜாராம் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கோமதியின் செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்ட ராஜாராம் பேசிப் பழகி வந்திருக்கிறார். இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது.
கள்ளக்காதல் சம்பவம்
இந்நிலையில், தனது மனைவிக்குத் தெரியாமல் கோமதியை வாடகை வீட்டில் குடிவைத்த ராஜாராம் அவருடன் வாழ்ந்து வந்திருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த விவகாரம் ராஜாராமின் வீட்டுக்குத் தெரிய வந்ததால் பெரிய பிரச்சனை வெடித்திருக்கிறது. பிரச்சனை மேலும் பெரிதான நிலையில் கோமதியைச் சந்திப்பதைத் தவிர்த்திருக்கிறார் ராஜாராம். இதனால் ஆத்திரமடைந்த கோமதி ராஜாராமைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி இருக்கிறார்.
கொலை முயற்சி
இந்த நிலையில் தான் கோமதியை கொலை செய்ய முடிவு செய்த ராஜாராம், "சில பிரச்சனைகளால் நமக்குள் அடிக்கடி தகராறு வருகிறது. அதனால் ஜோதிடம் பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும்" என அவரது ஜாதகத்தைப் பெற்றுச் சென்றிருக்கிறார். பின்னர் கோமதியை சந்தித்த ராஜாராம், "ஜாதகத்தில் பிரச்சனை இருக்கிறது. கிணற்றில் தண்ணீர் எடுத்து சாமிக்குப் பூஜை செய்தால் சரியாகிவிடும்" எனக் கூறியிருக்கிறார். இதனை நம்பியிருக்கிறார் கோமதி.
பரபரப்பு சம்பவம்
தொடர்ந்து தடங்கம் பெருமாள் கோவில் மேட்டுக்கு கோமதியை அழைத்துச் சென்றிருக்கிறார் ராஜாராம். பின்னர் அங்குள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து வர வேண்டும் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து கோமதியும் குடத்தில் கயிற்றைக் கட்டி தண்ணீர் இறைத்த போது அங்கு வந்த ராஜாராம் அவரை கிணற்றில் தள்ளிவிட்டு தப்பி ஓடியுள்ளார். அரைகுறையாக நீச்சல் தெரிந்ததால் உயிர் பிழைத்த கோமதி சத்தம் போட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீஸ் விசாரணை
இது தொடர்பாக கோமதி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜாராமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் கள்ளக்காதல் உறவை ஏற்படுத்தியதோடு, அவரை கொலை செய்ய முயன்ற காவலர் கைது செய்யப்பட்டு இருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications