ஆயிலை குடித்து வரும் ஓசூர் மெக்கானிக்.. அதுவும் பழைய பைக் ஆயில்.. காரணத்தை கேட்டால் ஆடிப்போயிடுவீங்க

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: ஓசூர் மெக்கானிக் சொன்னதை கேட்டு, பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.. இதையடுத்து, இவரை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்து வருகிறார்கள்.. யாரிந்த மெக்கானிக்? என்ன நடந்தது?

கர்நாடக மாநிலம் சிவமொக்கா பகுதி பானுவார நகரை சேர்ந்தவர் குமார்.. இவருக்கு 45 வயதாகிறது.. இவருக்கென்று சொந்தபந்தங்கள் யாருமே இல்லை.. பெற்றோரும் இல்லை.. உற்றார் உறவினர்களும் இல்லை..

hosur

குமார்: அதனால், சின்ன வயதிலிருந்தே, தனக்கு கிடைத்த வேலைகளை செய்து வந்தார்.. ஒருவழியாக மெக்கானிக் வேலையை கற்றுக் கொண்டார்.. இந்த தொழிலை வைத்து, சில கடைகளில் வேலை பார்த்தார். இதில் கிடைக்கும் பணத்தை வைத்து சாப்பிட்டு வந்தார்.

ஆனால், இவரது சாப்பாடு வித்தியாசமானது.. சின்ன வயசில் இவருக்கு வேலை எதுவும் கிடைக்காமல் அலைந்துள்ளார்.. அப்போது பசி பசி எடுத்தாலும், சாப்பிடுவதற்கு கையில் காசு இல்லை.. அதனால், டூவீலர்களுக்கு போடப்படும் பழைய ஆயிலை குடிக்க ஆரம்பித்துவிட்டார்.. ஒருகட்டத்தில் இந்த ஆயில்தான், இவருக்கு சாப்பாடாகிவிட்டது.. இதுவே அவருக்கு பழக்கமுமாகிவிட்டது.

25 வருடம்: இதுகுறித்து குமார் சொல்லும்போது, "நான் 25 வருடங்களாக, 3 வேளையும் ஆயிலை குடித்து வருகிறேன்.. பைக்குகளுக்கு பயன்படுத்தும் ஆயிலைதான் குடித்து வருகிறேன்.. இதை தவிர வேறு எந்த சாப்பாட்டையும் சாப்பிடுவதில்லை.. தண்ணீர்கூட குடிப்பதில்லை.. கடந்த 13 வருடங்களாக சபரிமலைக்கு நடந்தே சென்று வருகிறேன்..

நான் ஆயிலை குடிப்பது, சிலருக்கு அதிசயமாக இருக்கிறது. ஆதனால், நான் பலமுறை அவர்கள் முன்னிலையிலேயே ஆயிலை குடித்துக்காண்பித்துள்ளேன்... இதைப்பார்த்த பலரும், என்மேல் அனுதாபப்பட்டு, பணம் தந்து உதவினார்கள்" என்றார்.

வேண்டுகோள்: குமார் இப்படி சொல்வதையெல்லாம் பொதுமக்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர் என்றாலும், உடனடியாக இவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+