ஜி.கே.மணி முன்பே அன்புமணியை விமர்சித்த எம்ஆர்கே பன்னீர் செல்வம்! சிரித்தபடியே சைகை காட்டிய ஜிகேஎம்
தருமபுரி: தருமபுரியில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி முன்னிலையில் அன்புமணி ராமதாஸ் மீது அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் விமர்சனம் செய்திருந்தார். அப்போது ஜி.கே.மணி சிரித்தபடியே சைகையில் வேண்டாம் போதும் என தெரிவித்தார். இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது.

தருமபுரியில் சுற்றுலாத் துறையின் சார்பில் ஓகேனக்கல் ஆடிப்பெருக்கு விழா நடந்தது. இந்த விழாவில் பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி கலந்து கொண்டார்.
இந்த விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வமும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "என்ன உரிமை கேட்க போகிறார் என தெரியவில்லை. அது தலைவர் ஜி.கே.மணிக்குத்தான் தெரியும். என்ன உரிமை கேட்க போராடுகிறார்? உரிமையை மீட்க அப்பாவிடம் கேட்க போகிறாரா அன்புமணி என தெரியவில்லை" என்றார்.
மேடையில் இருந்த ஜிகேஎம்
உடனே அங்கு மேடையில் இருந்த ஜி.கே.மணி, சிரித்தபடியே சைகையால் வேண்டாம், என கேட்டதால் அங்கு சிரிப்பலை எழுந்தது. ஜி.கே.மணி முன்பே அன்புமணி குறித்து எம்ஆர்கே பன்னீர் செல்வம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அன்புமணி அல்லது அவரது ஆதரவாளர்கள் யாரேனும் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்பா- மகன் மோதல்
பாமகவில் ராமதாஸ்- அன்புமணி இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதை தணிக்க பல முறை சமாதான பேச்சு நடத்தியும் ராமதாஸ் பிடிவாதமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் செயல் தலைவராக அன்புமணி தொடர்வதனால் தொடரட்டும். தலைவர் பதவி கொடுக்க முடியாது என்று ராமதாஸ் சொல்கிறார்.
பொதுக் குழு கூட்டுதல்
இந்த நிலையில் இருவரும் தற்போது போட்டி பொதுக் குழுவை கூட்டுகிறார்கள். பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை: பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் உத்தரவுபடி, திண்டிவனம் - புதுச்சேரி செல்லும் வழியில் உள்ள பட்டானூர் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
ராமதாஸ் பொதுக் குழு
இதில், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர நிர்வாகிகள் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமதாஸ் நடத்தும் கூட்டத்துக்கு போட்டியாக ஆக. 9-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
போட்டி பொதுக் குழு
இது தொடர்பாக அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் வெளியிட்ட அறிக்கையில், "பாமக பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கான்ப்ளுயன்ஸ் அரங்கில் ஆக. 9-ம் தேதி நடைபெறும். பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிபியிடம் ராமதாஸ் புகார்
இந்த மோதல் போக்கிற்கு மத்தியில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளம் மற்றும் பேஸ்புக் கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்கள் கைப்பற்றி வைத்திருப்பதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடமும் ராமதாஸ் மனு அளித்திருந்தார்.
ஒட்டுக் கேட்பு கருவி
ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி கண்டறியப்பட்டிருந்தது. இதை வைத்தவர்கள் யாரென்று விரைவில் அறிவிப்பேன் என ராமதாஸ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், "தனது இல்லத்தில் ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்தது அன்புமணிதான். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் என்றால் அது அன்புமணிதான் என தெரிவித்திருந்தார்.
இது என் கட்சி
மேலும் அவர் கூறுகையில், பாமக என்பது நான் உருவாக்கிய கட்சி. 96 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று வியர்வை சிந்தி நான் வளர்த்த கட்சி. வேறு எவரும் இதற்கு உரிமை கொண்டாட முடியாது. என்னால் செயல் தலைவர் என்று சொல்லப்பட்ட அவர் 9ஆம் தேதி பொதுக் குழு என சொல்கிறார். அது கட்சியின் விதிகளுக்கு புறம்பானது என ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications