மாட்டிறைச்சி கொண்டு சென்றதால் இறக்கி விட்ட டிரைவர், கண்டக்டர் மீது பாய்ந்தது வன்கொடுமை சட்டம்!
தருமபுரி: தருமபுரி அருகே மாட்டு இறைச்சியை அரசுப் பேருந்தில் எடுத்துச் சென்றதால் பாதி வழியில் பெண்ணை இறக்கி விட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் மொரத்தூர் அருகே வசித்து வரும் பாஞ்சாலை என்ற பெண் அரூர் பகுதியில் சிறிய அளவில் பீஃப் பக்கோடா விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அந்த வகையில் அண்மையில் வழக்கம்போல் தனது சொந்த ஊரிலிருந்து மாட்டிறைச்சியை எடுத்துக்கொண்டு அரூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.

பாஞ்சாலை, பேருந்தில் ஏறி சில கிலோமீட்டர் சென்ற பின் நடத்துநர் ரகு, என்ன எடுத்துச் செல்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு, மாட்டிறைச்சி எடுத்துச் செல்வதாக பாஞ்சாலை பதிலளிக்க, உடனே நடத்துநர் ரகு, இதை எல்லாம் பேருந்தில் எடுத்து வரக்கூடாது என்று கூறி அவருக்கு டிக்கெட் வழங்க மறுத்து, பேருந்தை நிறுத்தி உடனே கீழே இறங்குமாறு கூறியுள்ளார்.
அது அனாந்தரப்பகுதி என்பதால், அடுத்த பேருந்து நிறுத்தத்திலாவது இறக்கி விடுங்கள், இங்கே இறக்கி விட்டால் போகக் கூட வழியில்லை, அவ்வளவு தூரம் நடந்து போக முடியாது என்று கெஞ்சியுள்ளார். ஆனால் அதனை கண்டுகொள்ளாத நடத்துநர் ரகு, பாஞ்சாலையை நடுவழியிலேயே கடுமையான வெயிலில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதனையடுத்து பாஞ்சாலை நடந்தே பேருந்து நிறுத்தம் சென்று வேறு பேருந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றுள்ளார்.
வீட்டிற்குச் சென்ற பாஞ்சாலை, நடந்த சம்பவத்தைத் தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் அந்த பேருந்து திரும்பி அந்த வழியாக வந்தபோது வழிமறித்து நியாயம் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பெண் பயணியின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் நடுவழியில் இறக்கி விட்டதற்காக ஓட்டுநர் சசிகுமார் மற்றும் நடத்துநர் ரகு இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் பரவிய நிலையில் கடும் கண்டனங்கள் எழுந்தன. பாதிக்கப்பட்ட பெண் பஞ்சாலை, நான் தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதை காரணம் காட்டி என்னை அவமானப்படுத்தி, பேருந்தில் இருந்து இறக்கி விட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கிய ஓட்டுநர் சசிகுமார் மற்றும் நடத்துனர் ரகு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பாஞ்சாலை அளித்த புகாரின் பேரில் அரசுப் பேருந்து நடத்துநர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமார் ஆகியோர் மீது தாழ்த்தப்பட்டோரை பொது இடத்தில் உள்ளே நுழையவிடாமல் தடுப்பது, அவமதிப்பது, வன்கொடுமை தடுப்பு சட்டம் என 4 பிரிவுகளின் கீழ் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications