காப்புக்காட்டில்.. அந்த பெண்ணின் உடம்பில் "தசையே" இல்லையாம்.. அதென்ன மண்டை ஓடு.. அலறிப்போன அரூர்
காப்புக் காட்டுக்குள் மாணவியின் எலும்புக்கூடு கிடந்ததால் அரூர் அருகே பரபரப்பு சூழ்ந்துள்ளது
தருமபுரி: அடர்ந்த காப்புக் காட்டு பகுதியில் கிடந்த மனித எலும்புக்கூட்டை பார்த்து பொதுமக்கள் அதிர்ந்து போனார்கள்.. இதுகுறித்த பரபரப்பு தகவல்களும் வெளியாகி உள்ளன.
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்திற்கு உட்பட்டது முள்ளிகாடு என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் பெருமாள்.. இவர் ஒரு விவசாயி.. இவரது மகள் ஞானசௌந்தர்யா கோயம்புத்தூரில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
ஆனால், கடந்த 9 மாதத்திற்கு முன்பு, பொது தேர்வு முடிந்து சொந்த ஊருக்கு வந்தார்.. அந்த நேரத்தில், கிராமத்தில் கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்தது.. அந்த விழாவில் ஞானசௌந்தர்யாவும் பங்கேற்றார்..

க்ளூ
ஆனால், திருவிழா நடைபெறும்போதே, ஞானசௌந்தர்யாவை காணவில்லை.. திருவிழா கூட்டத்தில் பெற்றோர் பதறிக்கொண்டு மகளை தேடினார்கள்.. எங்கேயுமே தேடியும் கிடைக்கவில்லை.. அதனால், கோட்டப்பட்டி போலீசில், மகளை காணோம் என்று புகார் அளித்தனர்.. போலீசாரும், உறவினர்கள் என அனைவரும் சேர்ந்து கோயம்புத்தூர், திருப்பூர், அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞானசசௌந்தர்யாவை தேடி பார்த்தனர்... ஆனால், எந்தஒரு தகவலும் கிடைக்கவில்லை.. ஒரு க்ளூ கிடைக்காமல் போலீசாரும் திணறியபடியே இருந்தனர்..

எலும்புக்கூடு
தன்னுடைய மகள் உயிரோடுதான் யாருடைய பாதுகாப்பிலோ உள்ளார் என்று பெருமாள் மிகுந்த நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளையும் ஓட்டி வந்துள்ளார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், எஸ்.அம்மாபாளையம் அருகே உள்ள காட்டுப்பகுதியில், ஒரு சடலம் தூக்கில் தொங்கப்பட்டு இருந்ததாகவும், ஆனால் உடல்கள் தசைப்பகுதிகள் எதுவும் இல்லாமல் ஒருசில எலும்புக்கூடுகள் மட்டுமே இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.. அந்த வழியாக கண்காணிப்பு பணிக்கு சென்ற கோட்டப்பட்டி வனக்காப்பாளர் ராஜா இதை பார்த்து அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

கைக்கடிகாரம்
பெருமாள் வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர்தான் இந்த தகவலை வந்து சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ந்து போன பெருமாள், ஒருவேளை அது தன்னுடைய மகளாக இருக்குமோ என்று நினைத்து, உறவினர்களுடன் காட்டுக்குள் ஓடினார். அங்கு சென்று பார்த்தபோது, எலும்பு கூடு கிடந்த இடத்தில் கைக்கடிகாரம், வளையல்கள், கவரிங் சங்கிலி, துப்பட்டா போன்றவை கிடந்தன... அதை பார்த்ததுமே வெடித்து கதறி அழுத பெருமாள், அதனை பார்த்த பெருமாள் இது தன்னுடைய மகள் அணிந்திருந்த பொருட்கள் போலவே உள்ளது என்றார்.. இதையடுத்து அங்கிருந்த பொருட்களை சேகரித்த போலீசார் எலும்பு கூடு மற்றும் மண்டை ஓட்டை தடயவியல் சோதனை செய்ய அனுப்பி வைத்தனர்.

DNA டெஸ்ட்
மருத்துவ குழுவினரை வரவழைக்கப்பட்டு பெண்ணின் எலும்பு கூடுகளை மற்றும் அவர் பயன்படுத்திய வாட்ச் உள்ளிட்டவர்களையும் சேகரித்து டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு எடுத்து சென்றனர்.. பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தற்கொலை அல்ல எனவும் பெற்றோர் தரப்பில் சொல்வதால், கொலை கண்ணோட்டத்திலும் விசாரணை ஆரம்பமாகி உள்ளது. பரிசோதனையின் முடிவு வந்த பிறகே அந்த உடல் காணாமல் போன மாணவியுடையதா என்பது தெரிய வரும். அடர்ந்த காப்புக் காடு பகுதியில் மனித எலும்பு கூடு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோவையில் வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய சிசிடிவி காட்சி! அதிர்ச்சியில் உறைந்த மக்கள் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்!











Click it and Unblock the Notifications