ஜாலியாக இருந்த கள்ளஜோடி.. சைலண்டாக வந்து தாழ்ப்பாள் போட்ட மக்கள்.. கடைசியில் பெண் எடுத்த முடிவு
கள்ளக்காதலால் அவமானப்பட்ட பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்
தர்மபுரி: வீட்டிற்குள் ஒரு காதல் ஜோடி ஜாலியாக இருந்த நிலையில், விஷயம் தெரிந்த அக்கம்பக்கத்தினர் அந்த வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டனர்.. இதனால் அவமானம் தாங்க முடியாத அந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்துள்ளது பூதிநத்தம் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் வேடியப்பன். 38 வயதாகிறது.. மனைவி பெயர் ஜமுனா.. திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன.
இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்... வேடியப்பன் ஒரு கட்டிட மேஸ்திரி.. பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.. அதனால் 2 வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

அதிர்ச்சி
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த அனுமந்தன் என்பவருடன் ஜமுனாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.. 2 பேரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்... இது அந்த பகுதி மக்களுக்கும் தெரிந்துள்ளது.. வழக்கம்போல் ஒருமுறை ஊருக்கு வந்தபோது, இந்த கள்ளக்காதல் ஜோடி பற்றி வேடியப்பனிடம் சிலர் சொல்லி உள்ளனர்.. இதனால் அதிர்ச்சி அடைந்த வேடியப்பன், மனைவியை கண்டித்தார்..

ரகசிய உறவு
பிறகு ஊர் பெரியவர்களிடமும் இந்த விஷயத்தை கொண்டு போனார்.. அவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தையும் நடத்தினார்.. ஊர் பெரியவர்களும் இனி 2 பேரும் கள்ள உறவை தொடர கூடாது என்று கண்டித்தனர். ஆனாலும் கள்ள ஜோடியின் உறவு தொடர்ந்தது.. ரகசியமாக இரவு நேரங்களில் சந்தித்து வந்துள்ளனர். அப்படித்தான், கடந்த 29ம் தேதி ஜமுனாவின் வீட்டிற்கு அனுமந்தன் வந்துள்ளார்.. இருவருமே ஜாலியாக இருந்துள்ளனர்.. ஆனால், இதை அக்கம் பக்கத்தினர் கவனித்துவிட்டனர்..

எச்சரிக்கை
அதனால் கள்ளக்காதல் ஜோடி வீட்டிற்குள் இருக்கும்போதே, அந்த வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி, இருவரையும் சிறை வைத்தனர்... பிறகு, பெங்களூருவில் உள்ள வேடியப்பனுக்கும் தகவல் தந்து வரவழைத்தனர்... வேடியப்பனும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.. பிறகு மறுபடியும் 2 பேரையும் கண்டித்துவிட்டு, மனைவியை கூடுதலாகவே எச்சரித்து விட்டு பெங்களூருக்கு மறுபடியும் வேலைக்கு சென்று விட்டார்.

தற்கொலை
ஆனால், பொதுமக்களிடம் வசமாக சிக்கியதில் இருந்தே ஜமுனா கூனிகுறுகி போனார்.. அவமானம் தாங்காமல் புழுங்கினார்.. ஒருகட்டத்தில் அவமானம் தாங்காமல் ஜமுனா வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்... தகவலறிந்து வந்த பாப்பாரப்பட்டி போலீசார், ஜமுனாவின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்... இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications