80 வருட கனவு நிறைவேறும்..தருமபுரிக்கு இதையெல்லாம் செய்வேன்..! பட்டியல் போட்ட செளமியா அன்புமணி..!
தருமபுரி: நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவடையவுள்ள நிலையில் தருமபுரி தொகுதி மக்களின் 80 ஆண்டு கனவான தருமபுரி - மொரப்பூர் இரயில் பாதை திட்ட பணிகளை உடனடியாக முடித்து ரயில் பயணத்தை தொடங்க விரைவாக நடவடிக்கை மேற்கொள்வேன் எனக் கூறி பொதுமக்களிடையே பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிய இருக்கும் நிலையில், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிராமங்களில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி.

காவிரி - தர்மபுரி உபரி நீர் திட்டம், தருமபுரி இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலை வாய்ப்பு, விவசாயிகள் முன்னேற்றத்திற்கான திட்டம் மற்றும் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதி உள்ளிட்ட பாமகவின் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
உரிய நடவடிக்கை: மக்களிடையே அவர் பேசுகையில், "தருமபுரி மாவட்ட வறட்சியைப் போக்க காவிரி - தருமபுரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்துவேன் என்றும் அதன்மூலம் 3 டி.எம்.சி உபரி நீரை, நீரேற்று முறையில் தருமபுரி மாவட்டத்தில் 1230 நீர்நிலைகளில் நிரப்ப முடியும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் தருமபுரி மாவட்டத்தின் 9 ஒன்றியங்கள் பயனடையும், சுமார் 15 லட்சம் பேருக்கு தூய்மையான குடிநீர் கிடைக்கும், கூடுதலாக 1 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும்.
ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்: பா.ம.க.வின் முயற்சியால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.7840 கோடியில் செயல்படுத்தப்படுவதற்கு முழுமூச்சாக செயல்படுவேன். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மக்களவை உறுப்பினராக இருந்து போது உருவாக்கிய 14 நீர்ப்பாசனத் திட்டங்களில் பாளையம்புதூர் & ஜெகநாதன் கோம்பைத் திட்டம், மாரியம்மன் கோவில் &பள்ளம் அணைத் திட்டம் ஆகியவை முடிக்கப்பட்டு விட்டன. பணிகள் தொடங்கப்பட்ட பஞ்சப்பள்ளி - ஜெர்தலாவ் பாசனக் கால்வாய், தூள்செட்டி ஏரி இணைப்பு, எண்ணேகொல்புதூர் - தும்பல அள்ளி நீர்ப்பாசன திட்டம் ஆகியவற்றை விரைந்து முடிப்பேன்.
நீர் திட்டங்கள்: இதுவரை நிதி ஒதுக்கப்படாத சின்னாறு -தொள்ளக்காது அணைத்திட்டம், பஞ்சப்பள்ளி - பாப்பாரப்பட்டி - இண்டூர் பாசன கால்வாய் திட்டம், குமாரசெட்டி - உப்பம்பள்ளம் தடுப்பணை திட்டம், நாகமரை ஊராட்சி மத்தளப்பள்ளம் கால்வாய், பொதியம் பள்ளம் அணை, வாணியாறு நீர்தேக்க இடதுபுற கால்வாய் நீட்டிப்புத் திட்டம், ஆணைமடுவு தடுப்பணைத் திட்டம், வள்ளி மதுரை அணை மட்டத்தை உயர்த்துதல் திட்டம் உள்ளிட்ட 9 திட்டங்களுக்கும் அரசின் நிதியைப் பெற்று செயல்படுத்த பாடுபடுவேன்.
80 ஆண்டு கனவு: பா.ம.க. இந்நாள், முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள தருமபுரி சிப்காட் வளாகத்திற்கு இந்தியாவின் பெரிய தொழிற்சாலைகளை கொண்டு வருவேன். அங்கே பல ஆயிரம் வேலைவாய்ப்புகளை உள்ளூர் இளைஞர்களுக்கு ஏற்படுத்துவேன். அதன் மூலம் தருமபுரி மாவட்டம் பொருளாதார மறுமலர்ச்சி பெறும். மேலும் பெண்களின் வேலைவாய்ப்புக்காக ஆயத்த ஆடை பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன். இத்தொகுதி மக்களின் 80 ஆண்டு கனவான தருமபுரி - மொரப்பூர் இரயில் பாதை திட்டத்திற்கு, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் முயற்சியால், ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, தாமதமாகி வரும் இத்திட்டப் பணிகளை உடனடியாக முடித்து ரயில் பயணத்தை தொடங்க விரைவாக நடவடிக்கை மேற்கொள்வேன்.
சிறுதானிய உற்பத்தி: தருமபுரியில் விளையும் மா, புளி, தக்காளி, மரவள்ளி, கரும்பு ஆகியவற்றை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தவும், ஏற்றுமதி செய்யவும் வசதியாக, தருமபுரியில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும், மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தவும் சிறப்பு மண்டலம் அமைக்கப்படும், பட்டுப்புழு வளர்ப்பு மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். பல நூறு உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கும் தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகளைத் தடுப்பதற்கான ரூ.775 கோடி செலவிலான உயர்மட்ட சாலைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி முடிக்க நடவடிக்கை எடுப்பேன்.
பொருளாதரா வளர்ச்சி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக தனிப்பிரிவு, காயச் சிகிச்சைக்காக தனி வளாகம், சிறுநீரகவியல் சிகிச்சைக்காக தனிப்பிரிவு, இருதய சிகிச்சைப் பிரிவு, மூளை & நரம்பியல் சிகிச்சைப் பிரிவுகள் ஆகியவற்றை ஏற்படுத்த பாடுபடுவேன். மேலும் பெண்ணாகரம், அரூர் மருத்துவமனைகளை மேம்படுத்துவேன். ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை சிறந்த சுற்றுலா மையமாக மாற்றி தொகுதியின் பொருளாதரா வளர்ச்சிக்கு உதவுவேன்" என தன்னுடைய திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications