என்னாச்சு.. கூட்டணி கட்சிகளை விட்டு விளாசிய ராமதாஸ்.. பாமக கூட்டத்தில் அனல் பறக்க பேச்சு
தருமபுரி: தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Recommended Video
இந்த கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:- திண்ணை பிரச்சாரம் முறையாக செய்தால் வரும் உள்ளாட்சி தேர்தலில் நமக்கு அது வெற்றியை கொடுக்கும். திண்ணை பிரச்சாரதை அந்தந்த ஊர்களில் உள்ள இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டும்.

தி.மு.க.வுக்கு பாராட்டு
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கடந்த அ.தி.மு.க அரசு நடைமுறைபடுத்தியது. பெரும்பாலான சமுதாயங்கள் இடஒதுக்கீடு வந்தது தவறு என கூறி உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற முயற்சி மேற்கொள்கின்றன. ஆனால் தற்போதைய தி.மு.க அரசு அதனை அமல்படுத்த அனைத்து வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.

கேவலமான நிகழ்வு
தமிழக அரசு அரசு மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியும் வருகிறது. அனால் எதிர்மனு மீது தடையாணை பெற பணி செய்து வருகிறது. இனி நாம் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் இந்த மாவட்டத்தில் தான் ஒரு அதிசயமான நிகழ்வு நடந்தது. அதே வேளையில் இதே மாவட்டத்தில்தான் ஒரு கேவலமான நிகழ்வும் நடந்தது. கடந்த தேர்தலில் கூட்டணி தர்மமே இல்லாமல் போனது.

வெங்காய கூட்டணி
பா.ம.க தலைவர் ஜிகே மணி, மூன்று நாட்கள் தொகுதிக்குள்ளே போக முடியவில்லை. பா.ம.க.வை வீழ்த்த வேண்டும் என்று எதிரிகளோடு கைககோர்த்துக் கொண்டு தோற்கடிக்கும் வேலைகளை செய்து வந்தனர். இது என்ன கூட்டணி? பெரியார் பாணியில் சொன்னால் வெங்காய கூட்டணி. இதைத்தான் தேர்தலில் பார்த்தோம்.

கண்ணீர் விட்டு வளர்த்தோம்
பா.ம.க இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு எத்தனையோ பழைய நினைவுகள் சொல்லலாம். பா.ம.க..வை தண்ணீர் விட்டு வளர்க்கவில்லை இந்த இயக்கத்தை கண்ணீர் விட்டு வளர்த்தோம். நாம் தமிழகத்தை ஆள வேண்டும். வரும் தேர்தலில் 70 முதல் 80 தொகுதிகளில் வெற்றி பெற்றால் நாம் ஆட்சி செய்யலாம். இனி ஒரு விதி செய்வோம். ஒரு புது விதியை உருவாக்குவோம். இன்று பாரதியின் பிறந்தநாள். அந்த விதியை எந்நாளும் காப்போம். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.












Click it and Unblock the Notifications