திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்! பரபரத்த சேலம் - பெங்களூர் நெடுஞ்சாலை.. பெரும் சேதம் தவிர்ப்பு
தருமபுரி: தருமபுரி அருகே பெங்களூர் - சேலம் நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த ஆம்னி பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் பஸ்சில் பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கபட்டுள்ளது. எனினும் பஸ் முழுவதுமாக தீயில் எரிந்து சாம்பலாகியது.
பெங்களூர் - சேலம் நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. தருமபுரியை அடுத்து வந்த போது திடீரென பஸ்சில் தீப்பிடித்தது. இதையடுத்து பஸ்சில் இருந்த டிரைவர் பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு வெளியே வந்தார். அடுத்த சில நொடிகளில் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. கரும்புகையுடன் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

உடனடியாக தீ விபத்து குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து வருகின்றனர். மின்கசிவு காரனமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கபட்டுள்ளது. எனினும் பஸ் முழுவதுமான தீயில் எரிந்து சாம்பலாகியது.
முதற்கட்ட விசாரணையில், பொள்ளாச்சியில் இருந்து நேற்று புறப்பட்ட இந்த ஆம்னி பஸ் பெங்களூர் சென்று விட்டு மீண்டும் பொள்ளாச்சி திரும்பியது. 7 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த ஆம்னி பஸ்சில் திடீரென ஒயர் கருகியது போல துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து தருமபுரியில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு பணிமனைக்கு பச்சை டிரைவைர் எடுத்து சென்றுள்ளார்.
அப்போது தான் இந்த விபத்து நடந்துள்ளது. முன்னதாக பஸ் தீப்பிடித்து எரிந்ததால் சாலையில் இருபுறமும் மற்ற வாகனங்களை வர விடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது போக்குவரத்து சீர்படுத்தப்பட்டு வருகிறது. நடுரோட்டில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications