"2 சாரும் மேல கை வைக்கிறாங்க.. வீடியோ அனுப்பறாங்க" கதறிய மாணவி.. "தூக்குல போடுங்க" கொதித்த ஊர்மக்கள்

அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: "மேல கை வைக்கிறாங்க.. இந்த வீடியோவை அனுப்பறாங்க.." என்று 2 பள்ளி ஆசிரியர்கள் மீது மாணவி பெற்றோரிடம் அழுதபடியே சொல்லவும்.. பொதுமக்களுடன் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர்.. தருமபுரி அருகே அரசு பள்ளியில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.. இங்கு வேலை பார்ப்பவர்கள் லட்சுமணன், சின்னமுத்து.. 2 பேருமே வரலாற்று பாட ஆசிரியர்கள்.

லட்சுமணனுக்கு 38 வயசு, சின்னமுத்துவுக்கு 34 வயசு.. அரூர் பகுதியில் தங்கி உள்ளனர்... அங்கிருந்துதான் தினமும் ஸ்கூலுக்கு வந்து போகிறார்கள்.. நிறைய நேரங்களில் இவர்கள் போதையிலும் கூட ஸ்கூலுக்கு வருவார்களாம்.

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள்

இதே பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவிக்கு 2 வாத்தியார்களுமே குறி வைத்தனர்.. நல்லா இருக்கோ இல்லையோ, காதல் கவிதைகள் என்ற பெயரில் கிறுக்கி எழுதி அதை மாணவிக்கு தருவார்கள்.. நிறைய கவிதைகள் மாணவியின் செல்போனுக்கு அனுப்புவர்.. ஆபாச வார்த்தைகளையும் அனுப்புவர்கள்.. ஆபாச படங்களையும் அனுப்புவார்கள்.

தொல்லை - டார்ச்சர்

தொல்லை - டார்ச்சர்

போட்டி போட்டுக் கொண்டு 2 பேருமே மாணவிக்கு பாலியல் தொல்லை தந்துள்னர். இதனால் மாணவி கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளானார்.. எங்கே வெளியே போய் இதையெல்லாம் சொல்லிவிடுவாரோ என்று 2 வாத்தியார்களும் பயந்துபோய், மாணவியை மிரட்டி வைத்தனர். "வெளியில் சொன்னால் சீரழித்துவிடுவோம், நீ இப்போ 10ம் கிளாஸ்... உன் மார்க்கை குறைச்சிடுவோம்" என்று மிரட்டினர். அதனால் யாரிடமும் சொல்லாமல் அந்த சிறுமி தனியாக தவித்தும், அழுதும் வந்துள்ளார்.

கதறல்

கதறல்

இந்த சமயத்தில், வழக்கத்துக்கு மாறாக நேற்று முன்தினம் 2 வாத்தியார்களும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா போதையில் வந்துவிட்டனர்.. அதனால் மாணவியிடம் ஸ்கூலுக்குள்ளேயே தகாத முறையில் நடக்க முயன்றனர்.. அலறி அடித்து தப்பித்து ஓடிய மாணவி, வீட்டில் போய் நடந்ததை எல்லாம் அழுதவாறே சொன்னார்.

உளறினார்கள்

உளறினார்கள்

அதிர்ந்து போன பெற்றோரும், 100-க்கும் மேற்பட்ட ஊர் மக்கள் திரண்டு ஸ்கூலுக்கு வந்துவிட்டனர்.. கேள்விகளை மாறி மாறி பொதுமக்கள் கேட்க.. 2 வாத்தியார்களுமே உளறினார்கள்.. போதையும் தெளியாமல் இருந்தது.. அதனால் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர்.. ஆனால் அவர் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி.. அதனால் அவராலும் சரியாக பதில் சொல்ல முடியவில்லை.

செல்போன்கள்

செல்போன்கள்

அதனால் வேறு வழி தெரியாத ஊர்மக்கள், 2 வாத்தியார்களையும் அங்கேயே சரமாரியாக அடித்து வௌத்தனர்.. தகவலறிந்து மகேந்திரமங்கலம் போலீசார் ஸ்கூலுக்கு வந்துவிட்டனர்.. 2 ஆசிரியர்களை பற்றி ஊர்மக்கள் புகார் சொல்லவும், அவர்களிடம் இருந்த 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.. பிறகு ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

தூக்குல போடுங்க

தூக்குல போடுங்க

ஆனால் எங்கே 2 வாத்தியார்களுமே வெளியே வந்துவிட போகிறார்களோ என்று பயந்து ஊர்மக்களும், ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். "2 பேரையும் முதல்ல தூக்குல போடுங்க.. அப்பதான் மத்தவங்க திருந்துவாங்க.." என்று கொதித்து போய் ஆவேசமாக தெரிவித்தனர்.. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் சமாதானம் செய்த பிறகே கலைந்து சென்றனர்.

நடவடிக்கை

நடவடிக்கை

இறுதியாக பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் செய்துவிடவும், 2 பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.. இது குறித்து துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி துறை சார்பாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+