தருமபுரி நில உரிமையாளர்கள் பீகார் போய் கல் உடைக்கிறாங்களாம்.. விவாதமான சௌமியா அன்புமணி மகள் பேச்சு
தருமபுரி: தருமபுரி லோக்சபா தொகுதியில் பாமக சார்பில் களமிறங்கியுள்ள சௌமியா அன்புமணிக்கு அவரது மகள்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், தருமபுரியில் உள்ள நில உரிமையாளர்கள் சிலர் பீகார், ஒடிசாவுக்கு சென்று கல் உடைக்கிறார்கள் என்று அவர்கள் பேசியிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே அரசியல் கட்சிகள் தீவிரமான பிரசாரத்தை மேற்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் இந்த முறை திமுக vs அதிமுக vs நாதக vs பாஜக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் களம் காண்கிறது.

திண்டுக்கல் - ம.திலகபாமா, அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு, ஆரணி - அ.கணேஷ் குமார், கடலூர் - தங்கர் பச்சான், மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி - இரா.தேவதாஸ் உடையார், தருமபுரி - சௌமியா அன்புமணி, சேலம் - ந.அண்ணாதுரை, விழுப்புரம் - முரளி சங்கர், காஞ்சிபுரம் (தனி) - வெ.ஜோதி வெங்கடேசன் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தருமபுரி வேட்பாளர் சௌமியா அன்புமணியின் தேர்தல் பரப்புரை பெரும் கவனம் ஈர்த்திருக்கிறது. அன்புமணி ராமதாஸின் மனைவி என்பதால் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதேபோல இவர் ஏற்கெனவே அன்புமணி ராமதாசுக்காக பிரசாரம் செய்திருக்கிறார். எனவே, தேர்தல் களத்தை எதிர்கொள்வதில் இவருக்கு எந்த சிக்கலும் இல்லை.
‛எங்க அம்மா தான் நிக்கிறாங்க.. ஒரு வாய்ப்பு கொடுங்க ப்ளீஸ்’’.. தாய் சௌமியாவுக்காக களமிறங்கிய மகள்கள்
இந்நிலையில் பிரசாரத்தில் இவரது மகள்கள் இவருக்காக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியிருக்கின்றனர். தருமபுரி நகர் பகுதியில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்த அவர்கள், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி தருமபுரியின் தண்ணீர் தேவையை எனது அம்மா தீர்த்து வைப்பார் என்று கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அதேநேரம் தருமபுரியில் உள்ள நில உரிமையாளர்கள் சிலர், ஒடிசாவுக்கும், பீகாருக்கும் கல் உடைக்கும் வேலைக்கு போவதாக பேசியிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
அதாவது, “தருமபுரி தொகுதியில் 15 லட்சம் குடும்பங்கள் இருக்கிறது. அதில் 3 லட்சம் பேர் பீகார், ஒடிசாவுக்கு சென்று கல் உடைப்பது, குவாரி வேலை என கூலி தொழில் செய்கின்றனர். இங்கே அவர்கள் நில உரிமையாளர்கள். அவர்களுக்கு நிலம் இருக்கிறது. ஆனாலும் அவர்கள் தங்கள் குழந்தை, பெற்றோர், உறவினரை விட்டுவிட்டு வெளி மாநிலங்களுக்கு சென்று வேலை பார்க்கிறார். ஏனெனில் இங்கு அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை” என்று கூறியுள்ளார்.
இவருடைய இந்த கருத்து பெரும் சலசலப்புகளை கிளப்பியிருக்கிறது. அதாவது பொருளாதார ரீதியாக பீகார், ஒடிசாவை விட தமிழகம் முன்னணியில்தான் இருக்கிறது என்றும், வேலை வாய்ப்பு கூலி வித்தியாசம் என அனைத்திலும் தமிழகம் இந்த இரு மாநிலங்களை விட சிறந்து விளங்குகிறது என்று அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இப்படி இருக்கையில், சௌமியா அன்புமணியின் மகள்கள் இவ்வாறு பேசியிருப்பது அரசியல் தளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications