Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆதார் அட்டையில் தமிழ் பெயர்கள் குளறுபடி.. தர்மபுரி முன்னாள் திமுக எம்பி செந்தில்குமார் கடிதம்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: இன்றைக்கு ஆதாரில் தமிழ் பெயர்களை டைப் செய்யும் போது, ஆங்கில பெயர்கள் மொழி பெயர்ப்பு என்பது பெரிய தலைவலியாக மாறி உள்ளது. ஏனெனில் தவறாக மொழி பெயர்த்துவிடுகிறது. இதனால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரசு மற்றும் வங்கிச் சேவைகளைப் பெற முடியாமல் தவித்து வருகிறாரகள். குறிப்பாக, தமிழில் பெயர்களைச் சரியாக உள்ளீடு செய்தாலும், மென்பொருள் தானாகவே அவற்றை மாற்றித் தவறான எழுத்துக்களை உருவாக்குவது பெரும் சிக்கலாக உள்ளது. இது தொடர்பாக தர்மபுரி முன்னாள் திமுக எம்பி செந்தில்குமார் கடிதம் பெங்களூரில் உள்ள ஆதார் மண்டல அலுவலகத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் "ஸ்ரீ" (Sri) என்ற எழுத்து, ஆதார் மென்பொருளில் தானாகவே "ஷ்ரீ" என்று மாற்றப்படுவதாகப் புகார்கள் அதிகரித்துள்ளது. உதாரணமாக, மிதுன் ஸ்ரீராம் என்ற நபர் தனது பெயரைச் சரியாக உள்ளீடு செய்தும், ஆதார் அட்டையில் "மிதுன் ஷ்ரீராம்" எனத் தவறாக அச்சிடுகிறது. ஆதார் மைய ஊழியர்கள் முறையாகப் பெயரை மாற்ற முயன்றாலும், UIDAI-ன் பின்வரிசைத் தொழில்நுட்பம் தானாகவே அதைத் திருத்துவது அதிகாரிகளுக்கே சவாலாக உள்ளது.

Tamil names are being distorted due to Aadhaar glitch former MP Senthilkumar s wrotes letter UIDAI

ஆதார் அட்டையில் பிழை

ஆதார் அட்டையில் உள்ள இந்தப் பிழைகளால் ஆதார் மற்றும் பான்கார்டு பெயர்கள் பொருந்தாததால் வங்கிக் கணக்கு தொடங்குவதிலும், பணப் பரிமாற்றத்திலும் சிக்கல் ஏற்படுகிறது. அதேபோல் ரேஷன் கார்டு, மானியங்கள் மற்றும் ஓய்வூதியம் போன்ற அரசு உதவிகளைப் பெறுவதில் தட்டுப்பாடு நிலவுகிறது. பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் கல்விச் சான்றிதழ்களில் உள்ள பெயருடன் ஆதார் பெயர் ஒத்துப்போகாததால் மாணவர்கள் மற்றும் வேலை தேடுவோர் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

தர்மபுரி முன்னாள் எம்பி கடிதம்

இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்ய UIDAI உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இது தொடர்பாக தர்மபுரி முன்னாள் திமுக எம்பி செந்தில்குமார் கடிதம் பெங்களூரில் உள்ள ஆதார் மண்டல அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவர் கூறுகையில், "ஆதார் தரவுத்தளத்தில் பிராந்திய மொழிகள், குறிப்பாக தமிழ் மொழியில் தொடர்ந்து ஏற்படும் எழுத்துப் பிழைகள் குறித்து உங்கள் அவசர கவனத்திற்கு நான் எழுதுகிறேன்.

ஸ்ரீ எழுத்தில் பிரச்சனை

மிதுன் ஸ்ரீராம் (Mithun Shriram S - Aadhaar No. 3757 1003 3196) என்பவரது வழக்கைச் சுட்டிக்காட்டி இக்கடிதம் எழுதப்படுகிறது. ஆதார் மையங்களில் "மிதுன் ஸ்ரீராம் சி" என்று சரியாக உள்ளீடு செய்தாலும், ஆதார் அட்டை உருவாகும்போது "மிதுன் ஷ்ரீராம் சி" எனத் தவறாக அச்சிடப்படுகிறது. அதாவது "ஸ்ரீ" என்ற எழுத்திற்குப் பதில் "ஷ்ரீ" என்ற எழுத்து பயன்படுத்தப்படுகிறது.

தொழில்நுட்பக் குறைபாடு

உள்ளூர் ஆதார் மையங்கள் மற்றும் மதுரை ஆதார் சேவா கேந்திரா ஆகியவற்றால் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை. மென்பொருள் தானாகவே மொழியை மாற்றும் 'Backend Auto-transliteration' செயல்பாடே இதற்குப் காரணமாக இருக்கலாம். இந்தத் தொழில்நுட்பக் கோளாறை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.

பொதுவான பாதிப்பு

இது ஒரு தனிநபரின் பிரச்சனை மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் பலருக்கு இத்தகைய பிழைகள் ஏற்படுகின்றன. ஆதார் என்பது வங்கி, நிதிப் பரிமாற்றம், அரசுத் திட்டங்கள், கல்வி மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றுக்கு அடிப்படை ஆவணம் என்பதால், இத்தகைய பிழைகள் பொதுமக்களுக்குக் கடும் இன்னல்களைத் தருகின்றன.

மிதுன் ஸ்ரீராம் என்பவரது ஆதார் பதிவில் உள்ள பிழையை உடனடியாகச் சரிசெய்து தர வேண்டும். 2. நீண்ட காலத் தீர்வாக, "பிராந்திய மொழிபெயர்ப்புப் பிழைகள்" (Regional Language Transliteration Error) எனத் தனிப் புகார்ப் பிரிவை உருவாக்கி, தொழில்நுட்ப ரீதியாக இதைச் சரிசெய்ய வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தக் கடிதத்தின் நகல்களை அவர் டெல்லியில் உள்ள ஆதார் தலைமையகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பதிவுப்பிரிவின் துணை இயக்குநர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+