ஆயேஹே! ஆயேஹே! - பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து இந்தியில் முழக்கமிட்ட விஜயகாந்த் மகன்

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை தடுக்காத மத்திய பாஜக அரசை கண்டித்து மாட்டு வண்டியின் மீது பைக்கை ஏற்றி அதில் அமர்ந்து பேரணி சென்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Recommended Video

    ஆயேஹே! ஆயேஹே! - பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து இந்தியில் முழக்கமிட்ட விஜயகாந்த் மகன்

    பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து
    தருமபுரியில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், தருமபுரி நான்கு வழிச்சாலையில் மாட்டுவண்டியில் இருசக்கர வாகனம் மற்றும் சிலிண்டரை ஏற்றி ஊர்வலம் சென்றார்.

    மோடிக்கு புரிவதற்காக இந்தியில் முழக்கம்

    மோடிக்கு புரிவதற்காக இந்தியில் முழக்கம்

    பின்னர் அங்குள்ள BSNL அலுவலகம் முன்பு கட்சியினருடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அவர், பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார். அப்போது பேசிய அவர், "நாம் ஆர்ப்பாட்டம் செய்தால் மத்திய அரசுக்கு தமிழ் தெரியவில்லை என கூறுகிறார்கள். நமது கோரிக்கை ஒன்றிய அரசுக்கு தெரிய வேண்டும் என்றால் இந்தியில் முழக்கங்களை எழுப்புவோம். அதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிப்பார்." எனக்கூறி இந்தியில் முழக்கங்களை எழுப்பினார்.

    கேப்டன் நலமாக இருக்கிறார்

    கேப்டன் நலமாக இருக்கிறார்

    அப்போது பேசிய விஜயபிரபாகரன், "எனது தந்தை நலமாக உள்ளார். வாட்ஸ் அப், சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், தமிழ்! தமிழ்! என கூறும் முத்தமிழறிஞர் கலைஞரின் மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு தமிழ் கலாச்சார உடை அணியாமல் கோட் சூட் அணிந்து சென்றார். ஆனால் அங்குள்ள ஷேக்குகள் தங்களின் பாரம்பரிய உடையை அணிந்துள்ளனர்.

     உதயநிதி பற்றி ஸ்டாலின் பேசுகிறாரா?

    உதயநிதி பற்றி ஸ்டாலின் பேசுகிறாரா?

    சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் நடிகர் சிவாஜி கணேசனைபோல் காணாமல் போய்விடுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். அவர் யாரை கூறுகிறார் எனத் தெரியவில்லை தேமுதிகவை கூறுகிறாரா? அல்லது அவரது மகன் உதயநிதியை கூறுகிறாரா? என குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டும்.

    தேமுதிகவுக்கு வாக்களிக்காமல் மக்கள் தோற்றுவிட்டனர்

    தேமுதிகவுக்கு வாக்களிக்காமல் மக்கள் தோற்றுவிட்டனர்

    எனது தந்தை வெளிநாட்டுக்கு செல்லும் போது வேட்டி சட்டையில் தான் செல்வார். தமிழ்நாடு மக்கள் எங்களுக்கு வாக்களிக்காமல் தோற்கடித்தனர். உண்மையை சொல்லப்போனால் நாங்கள் தோற்கவில்லை. நீங்கள்தான் நல்ல தலைவரை இழந்து விட்டீர்கள். இதனால் நீங்கள் தான் தோல்வி அடைந்துள்ளீர்கள்.

    பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்து பேசாத அண்ணாமலை

    பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்து பேசாத அண்ணாமலை

    தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எதற்கெடுத்தாலும் புள்ளி விவரத்துடன் பேசுகிறார். ஆனால் அவர் பெட்ரோல், டீசல் உயர்வை பற்றி தமிழகத்தில் வாயே திறப்பதில்லை. தேமுதிகவை பற்றி விமர்சனம் செய்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. எதிர்கட்சி தலைவராக கேப்டன் இருந்தார். அதற்கு பிறகு அரசியல் சூழ்ச்சியின் காரணமாக நாம் தோல்வியடைந்தோம். " எனப் பேசினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+