Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்முபீ ஆசையாய் கொடுத்த மாதுளை ஜூஸ்.. ரத்த வாந்தி எடுத்த ரசூல்! கனவில் நினைத்துப் பார்க்காத சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: தர்மபுரி அருகே கணவனுக்கு மாதுளை ஜூஸில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து கொலை செய்த மனைவி கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சலூன் கடை வைத்திருந்த நபருடன் ஏற்பட்ட பழக்கம், கொலையில் முடிந்து தற்போது இருவர் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அரூரை பரபரப்பாகியுள்ள இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தரும் பின்னணி வெளியாகி உள்ளது.

தர்மபுரி அருகே அறிவுரை அடுத்த கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரசூல். ஓட்டுனரான இவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் சிக்கல் ஒரு கிராமத்தைச் சேர்ந்த அம்முபி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த ஐந்தாம் தேதி இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்கிய ரசூல் நள்ளிரவில் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதை அடுத்து அவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Dharmapuri crime police

அங்கு அவரது ரத்த மாதிரி சோதனை செய்தபோது அவரது உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து உள்ளதை கண்டுபிடித்தனர். சந்தேகம் அம்முபி பக்கம் திரும்பியது. தனது மனைவி அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் லோகேஸ்வரன் என்பவர் முறையற்ற உறவில் இருந்த நிலையில் தனது மனைவியே உணவில் விஷம் வைத்திருக்கலாம் என ரசூல் சந்தேகித்தார். இது தொடர்பாக போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் அம்முபியின் செல்போனை சோதனையிட்ட போது அதில் லோகேஸ்வரன் அடிக்கடி பேசியது தெரிய வந்தது. மேலும் செல்போனை ரெக்கார்டை ஆராய்ந்த போது அதில் முதலில் கணவருக்கு சாப்பாட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்து ஒன்றுமே ஆகவில்லை என்றும் அதற்கு பிறகு மாதுளை ஜூஸில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து உள்ளேன் என பேசியது பதிவாகி இருந்தது.

தொடர்ந்து இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அம்முபி மற்றும் லோகேஸ்வரன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். ஆறு ஆண்டுகளுக்கு மேலாக லோகேஸ்வரனும் அம்முபீயும் முறையற்ற உறவில் இருந்ததும், இதனால் ஆத்திரமடைந்த ரசூல் சலூன் கடையில் புகுந்து லோகேஸ்வரனை தாக்கியது தெரியவந்தது.

இதை எடுத்து ரசூலை கொலை செய்யும் நோக்கில், லோகேஸ்வரனின் ஆலோசனையின் பேரில் அம்முபி திட்டமிட்டு உணவில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்ததும் தெரிய வந்தது. இதற்கிடையே மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரசூல் நேற்று இரவு இறந்தார். இதை அடுத்து கொலை வழக்காக மாற்றிய போலீசார் அம்முபி, லோகேஸ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக் காதலனுக்காக கணவனையே தீர்த்து கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+