தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குளுக்கோஸ் ஏற்ற ரூமுக்குள்.. பெண்ணை அழைத்து சென்ற இளைஞர்.. திடீரென ஒரு அலறல்.. ஸ்தம்பித்த தர்மபுரி

தர்மபுரியில் சிகிச்சை தந்து கொண்டிருந்த போலி டாக்டர் கைதானார்

Google Oneindia Tamil News

தர்மபுரி: உடல்நிலை சரியில்லை என்று மெடிக்கல் ஷாப்புக்கு மருந்து வாங்க வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார் ஓனர் சண்முகம்..!

சமீப காலமாகவே தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது என்றாலும், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியில், பெண்களுக்கு எதிராக பதிவாகும் வழக்குகளும் அதிகமாகி கொண்டே வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, பெண்களுக்கு எதிரான அதிலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

கேமரா ஆனில் இருப்பது தெரியாமல்.. பெண்ணிடம் தவறாக நடந்த வக்கீல்.. வாழ்நாள் தடை போட்ட சென்னை ஐகோர்ட் கேமரா ஆனில் இருப்பது தெரியாமல்.. பெண்ணிடம் தவறாக நடந்த வக்கீல்.. வாழ்நாள் தடை போட்ட சென்னை ஐகோர்ட்

தர்மபுரி

தர்மபுரி

பெண்களுக்கான சட்டத்தை முழுமையாக அமல்படுத்தாதது, தனி மனித ஒழுக்கமின்மை, கலாச்சார சீரழிவு, செக்ஸ் பற்றிய தவறான முடிவு, வறுமை, போன்ற காரணங்களால் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் உயர்ந்து வருகிறது. இவைகளை தடுக்க தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்தாலும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தீவிரமான தண்டனைகள் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது..

சண்முகம்

சண்முகம்

தற்போது தர்மபுரியில் மீண்டும் ஒரு அக்கிரமம் நடந்துள்ளது.. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இந்த பகுதியில் சண்முகம் என்ற இளைஞர் மெடிக்கல் ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகிறார்... மெடிக்கல் ஷாப் போல இல்லாமல், சற்று பெரிய அளவில் கிளினிக் போல இருந்துள்ளது.. அங்கு வரும் நோயாளிகளுக்கு அவரே சிகிச்சை தந்து, அதற்கு மருந்தும் கொடுத்து அனுப்புவாராம்..

 இலக்கிய பாரதி

இலக்கிய பாரதி

இந்த நிலையில் சொன்னம்பட்டியை சேர்ந்த மதன்குமார் தன்னுடைய மனைவி இலக்கியபாரதியை அழைத்து கொண்டு இந்த மெடிக்கல் ஷாப்புக்கு வந்துள்ளார்.. இலக்கிய பாரதிக்கு 30 வயதாகிறது.. உடல்நிலை சரியில்லை என்பதால், சண்முகத்திடம் சிகிச்சைக்காக அழைத்து வந்திருக்கிறார்.. அவரை பரிசோதித்த சண்முகம், இலக்கியபாரதிக்கு குளுக்கோஸ் போட வேண்டும் என்று சொல்லி, மதன்குமாரை வெளியே நிற்கவைத்துவிட்டு, மெடிக்கல் ஷாப்புக்கு உள்ளேயே ஒரு ரூமுக்குள் அழைத்து சென்றுள்ளார்..

புகார்

புகார்

அங்கு நுழைந்ததுமே இலக்கியபாரதியிடம் சண்முகம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்துள்ளார்.. இதனால் அதிர்ந்து போன இலக்கியபாரதி அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்துள்ளார்.. தனது கணவரிடம் இதை பற்றி சொல்லி அழுதுள்ளார்.. இதை கேட்டு அதிர்ந்து போன கணவன், உடனடியாக காரிமங்கலம் போலீசில் புகார் தந்தார்.. அந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சண்முகத்தை கைது செய்தனர்.. அவரிடம் விசாரணையும் நடத்தினர்..

விசாரணை

விசாரணை

அப்போதுதான், அவர் மெடிக்கல் ஷாப் என்ற பெயரில் ஒரு கிளினிக் நடத்திவந்தது தெரியவந்துள்ளது.. அதுமட்டுமல்ல, சண்முகம் ஒரு போலி மருத்துவர் என்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.. இத்தனை நாளும் அந்த பகுதி மக்களுக்கு சிகிச்சை தந்து, பணம் சம்பாதித்து வந்திருப்பதால், அதுகுறித்த விசாரணையை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.. இப்போது சண்முகம் ஜெயிலில் உள்ளார்..!

English summary
woman complaint and fake doctor arrested for tried to abuse near Dharmapuri
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X