சிகப்பா இருந்தா இந்திக்காரங்களா? கும்பலாக பதுங்கியிருந்த பங்களாதேஷிகள்! கையில் ஆதார் கார்டு.. ஷாக்!
திண்டுக்கல்: திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே தனியாருக்கு சொந்தமான மில்லில் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த 29 நபர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்திக்காரர்கள் என கூறி போலி அடையாள அட்டையுடன் அவர்கள் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் என்ற பெயரில் ஏராளமான வங்கதேச தொழிலாளர்கள் பணியாற்றுவதாக புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாகரை ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான கிளாசிக் போலோ எனும் பின்னலாடை நிறுவனம் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் பனியன்கள், உள்ளாடைகள் தயார் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாக மில்லில் வேலை செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் பீகார், ஒரிசா, அசாம், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான வெளி மாநில தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் வங்காளதேசத்தை சேர்ந்த 29 நபர்கள் ஒட்டன்சத்திரம் வாகரை மில்லில் தங்கி வேலை பார்ப்பதாக ஒட்டன்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் ஒட்டன்சத்திரம் காவல்துணை கண்காணிப்பாளர் டி.எஸ்.பி கார்த்திகேயன், ஆய்வாளர் தங்கராஜ் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சென்று சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு வேலை பார்த்து வந்த 29 நபர்களையும் பிடித்து விசாரித்தனர். அவர்களின் ஆதார் கார்டு, மற்றும் அவர்களின் முழு விவரங்களை விசாரணை செய்த போது போலியாக ஆதார் கார்டு தயாரித்து தமிழகத்துக்குள் நுழைந்து பணியில் ஈடுபட்டது தெரியவந்தது.
பின்னர் இவர்களின் கைரேகை பதிவுகள் உள்ளிட்டவைகளை பதிவு செய்த போலீசார், 29 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பணியாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், தாடிக்கொம்பு, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான நூற்பாலைகள், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏஜெண்டுகள் மூலம் வட மாநில தொழிலாளர்கள் என்ற பெயரில் வங்கதேசத்தை சேர்ந்த தொழிலாளர்களை வரவழைத்து பணியாற்ற வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஏற்கனவே மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வங்கதேச தொழிலாளர்களால் கலவரம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் நிலையில், சட்ட விரோதமாக இந்தியாவில் வந்து அங்கிருந்து வட மாநில தொழிலாளர்கள் என்ற பெயரில் ரயில்கள் மூலம் தென் தமிழகத்திற்கு வந்திருக்கின்றனர்.
தொடர்ந்து போலியாக ஆதார் அட்டை தயாரித்து அவர்கள் பணியாற்றி வந்தது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சனையின் போது பாகிஸ்தானியர்கள் மற்றும் சட்ட விரோத குடியேறிகளை மத்திய அரசு வெளியேற்றி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் போலியாக ஆதார் கார்டு தயாரித்து வங்கதேச தொழிலாளர்கள் பணியாற்றி வருவது பதட்டத்தை மேலும் அதிகரித்து இருக்கிறது. இது மட்டுமல்லாமல் திருப்பூர் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் சட்ட விரோதமாக வங்கதேசத்தினர் பணியாற்றி வருவதாக கூறப்படும் நிலையில். இது தொடர்பாக தமிழகம் முழுவதும் விரிவான சோதனை நடத்த வேண்டியது அவசியம் என்கின்றனர் பொதுமக்கள்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications