200 அண்டா, 300 ஆடுகள்.. திண்டுக்கல்லின் மூக்கை துளைத்த மட்டன் குழம்பு.. கமகம ஆட்டுக்கறி, கோழி கிரேவி
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள கோயில் திருவிழா வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. என்ன காரணம்?
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது கோம்பைட்டி என்ற கிராமம்.. இது மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த கிராம மக்களின் புராதன கோயில் பெரியதுரையான் மிகவும் பிரசித்தி பெற்றது.. எப்போதுமே சித்திரை திருவிழாக்களை, இம்மக்கள் திரண்டு வந்து கோலாகலமாக கொண்டாடுவார்கள். இந்த சுவாமிக்கு கிடா வெட்டி பூஜை செய்து வணங்கினால் நல்ல மழை பொழியும். விளைச்சல் பெருகும். விவசாயம் செழிக்கும். அதுமட்டுமின்றி விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சித்திரை திருவிழா: அப்படித்தான் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சி தற்போது நடைபெற்றுள்ளது.. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் துவங்கி, பக்தர்களுக்கு அன்னதானம் வரை வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.. இதற்காக மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதற்காக 300 ஆடுகள் காணிக்கையாக செலுத்தப்பட்டன.. இந்த 300 ஆடுகளையும் வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.. ஆடுகளை தவிர, கோழிகளையும் பக்தர்கள் கருப்பண்ணசாமிக்கு பலியிட்டனர்...
பலிகடா: நேர்த்திக்கடன் முடிந்ததுமே, கோவில் வளாகத்திலேயே ஆடுகள் ஒவ்வொன்றாக உரித்து உரித்து மலைபோல குவித்து வைத்தனர்.. அதேபோல கோழிகளும் உடனுக்குடன் தோல் உரிக்கப்பட்டு இறைச்சி பிரித்தெடுக்கப்பட்டது.
பிறகு ஆட்டுக்கறி குழம்பும், கோழிக்கறி குழம்பும் தயார் ஆனது.. மறுபுறம் அரிசி சாதம் சமைக்கப்பட்டு மலை போல் குவித்து வைக்கப்பட்டது. ஆட்டுக்கறியில் கிரேவி தனியாகவும், கறிக்குழம்பு தனியாகவும் சமைக்கப்பட்டது. அனைத்து அசைவ உணவுகளையும் சமைக்கப்பட்டதையடுத்து, அன்னதானம் ஆரம்பமானது.
கிட்டத்தட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.. கறி விருந்தில் திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் பக்தர்கள் விழாவிற்கு வருகை புரிந்திருந்தனர்.
விவசாயிகள்: இதுகுறித்து கோம்பைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சொல்லும்போது, சித்திரை திருவிழாவுக்கு மழை வேண்டி 100க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்படுவது வாடிக்கை.. இந்த வருஷம் திருவிழாவை நாங்கள் செய்துள்ளோம்.. இப்போதும் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கும் மிகவும் மகிழ்ச்சி" என்றனர்.












Click it and Unblock the Notifications