திருச்சூர் விபத்து.. தமிழக மாணவர்கள் மது அருந்தியிருக்கலாம்.. தடயவியல் மருத்துவர் தகவல்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: கேரளா மாநிலம் திருச்சூர், கைப்பமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பொறியியல் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். இவர்களில் சிலர் விபத்துக்கு முன் மது அருந்தியிருக்கலாம் என முதற்கட்ட உடற்கூறாய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாகத் தடயவியல் நிபுணர் தெரிவித்திருக்கிறார்.

திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவரும், உடற்கூறாய்வை மேற்கொண்டவருமான மருத்துவர் ஹிதேஷ் சங்கர் தனது ஃபேஸ்புக் பதிவில், முதற்கட்ட மதிப்பீட்டின்படி மாணவர்கள் மது அருந்தியிருக்க வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

8 TN students killed by Thrissur accident forensic doctor indicates possible alcohol consumption

எனினும், "இரத்தத்தில் மதுவின் அளவு இருந்தது மட்டுமே விபத்துக்குக் காரணம் என்று அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. மது அருந்துவது ஓட்டுநரின் கவனம், முடிவெடுக்கும் திறன், எதிர்வினை நேரம் மற்றும் வேகத்தைக் கணிக்கும் திறனைப் பாதித்து விபத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கும். ஆய்வக முடிவுகள் வந்த பிறகே மது அல்லது போதைப்பொருட்களின் பயன்பாடு குறித்து முழுமையாக உறுதிப்படுத்த முடியும்" என்று எச்சரிக்கையான தொனியில் பதிவிட்டுள்ளார்.

விபத்தின் பின்னணி

திண்டுக்கல் அருகே பி.எஸ்.என்.ஏ. என்ஜினீயரிங் கல்லூரியில் மதுரை, சேலம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்கள், ஒரு காரில் கேரளத்துக்கு சுற்றுலா புறப்பட்டனர். அவர்கள் குருவாயூர் சென்று விட்டு கொச்சி செல்ல திட்டமிட்டனர். அதன்படி குருவாயூரில் சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்து கடந்த இரண்டு நாள் முன்பு இரவு கொச்சிக்கு புறப்பட்டனர். அவர்கள் சென்ற கார், திருச்சூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

நள்ளிரவு 12 மணியளவில் திருச்சூர் கைப்பமங்கலம் பகுதியில் பனம்பிக் குன்னு என்ற இடத்தில் கார் வந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு சரக்கு லாரி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் அடையாளம் தெரியாத அளவுக்கு சுக்குநூறாக நொறுங்கியது.

இதனால் லாரியில் தூங்கி கொண்டிருந்த டிரைவரும், கிளீனர் அதிர்ச்சியில் எழுந்து பார்த்தனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் அங்கு ஓடி வந்தனர். விபத்தில் கார் நொறுங்கி கிடப்பதை பார்த்து மனம் பதைபதைத்தனர். இதுகுறித்து உடனடியாக கைப்பமங்கலம் தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். காருக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பொதுமக்கள் இறங்கினர். கார் உருக்குலைந்து கிடந்ததால் அதன் கதவை தேடி பார்த்தனர். ஆனால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் காரை வெட்டி எடுத்து அதற்குள் சிக்கியவர்களை மீட்டனர்.

அப்போது காருக்குள் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரிய வந்தது. உயிருக்கு போராடிய 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். முன்னதாக மோதிய வேகத்தில் கார் முற்றிலும் நொறுங்கியதால், மீட்புக் குழுவினர் காரை வெட்டி எடுத்தே உடல்களை மீட்டார்கள்.

உடற்கூறாய்வு முடிவுகளின்படி, மாணவர்களின் தலை, நெஞ்சு மற்றும் உள் உறுப்புகளில் ஏற்பட்ட மிகக் கடுமையான காயங்கள் காரணமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தது. ஒரு மாணவரின் இரு கால்களும் துண்டிக்கப்படும் அளவுக்கு மோதலின் வீரியம் அதிகமாக இருந்திருக்கிறது.

போலீசாரின் விசாரணை

விபத்துக்குச் சற்று முன்பாக, தாலிகுளம் பகுதியில் லாட்ஜில் அறை எடுப்பது தொடர்பாக இந்த மாணவர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து காவல்துறை வருவதற்குள் மாணவர்கள் காரில் வேகமாகத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளைப் போலிஸார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், விபத்து நடந்த தேசிய நெடுஞ்சாலை 66-இல் உள்ள குறைபாடுகள் குறித்துப் போலீஸார், மோட்டார் வாகனத் துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்ய உள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+