அத்துமீறிய தந்தை..மகள் கர்ப்பம்! கொடூரனின் நண்பர்கள் கூடவா? ஷாக் திண்டுக்கல்! தட்டி தூக்கிய போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொடுமை செய்து வந்த நிலையில் அவர் கர்ப்பமாகி இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தை உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சேர்ந்த 47 வயதான சமையல் தொழிலாளியின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனைதொடர்ந்து தனது 12 வயது மகளை அவர் வளர்த்து வந்திருக்கிறார்.

மனைவி இல்லாத காரணத்தால் தனது ஆசைக்கு மகளை பயன்படுத்தி வந்திருக்கிறார் கொடூர மனம் கொண்ட அந்த சமையல் தொழிலாளி. மேலும் தான் வேலைக்கு செல்லும்போது அதேபகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளியான கண்ணன் என்பவரது வீட்டில் தனது மகளை விட்டுச்சென்றார்.

12 வயது சிறுமி

12 வயது சிறுமி

கண்ணனுக்கு திருமணமாகி அவரது மனைவியும் பிரிந்து சென்றுவிட்டார். அவரது மகள் மூளைவளர்ச்சி இல்லாமல் இறந்துவிட்டார். இந்த சூழ்நிலையில் பாதுகாப்புக்காக வந்த சிறுமியிடம் கண்ணனும் பாலியல் தொந்தரவு செய்தார். இதுகுறித்து தனது தந்தையிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். அதற்கு கண்ணன் தனக்கு நெருக்கமான நண்பர். மேலும் குடும்பத்திற்கு ஏராளமான உதவிகள் செய்து வருகிறார். எனவே இதுகுறித்து யாரிடமும் கூறவேண்டாம் என மகளை மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து கொடுமை

தொடர்ந்து கொடுமை

சிறுமியும் தனது தந்தைக்கு பயந்து இதனை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இச்சூழ்நிலையில் சிறுமியுடன் கண்ணன் நெருக்கமாக இருந்ததை அதேபகுதியை சேர்ந்த அரிசிக்கடை உரிமையாளர் முகமது ரபீக் என்பவர் பார்த்துள்ளார். இதனைதொடர்ந்து அவரும் சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் 12 வயது சிறுமி 3 மாத கர்ப்பிணியானார். இதுகுறித்த எந்த ஞானமும் தனக்கு இல்லாததால் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை யாரிடம் சொல்வது என தனிமையில் அழுது வந்துள்ளார்.

மயங்கிய சிறுமி

மயங்கிய சிறுமி

இதனை அறியாமலேயே தந்தையும் அவரது நண்பர்களும் தொடர்ந்து சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது தான் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி சொல்லி கதறி அழுதார்.

குண்டர் சட்டம்

குண்டர் சட்டம்

இதனைதொடர்ந்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை சீரழித்த தந்தை உள்பட 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு எஸ்.பி பாஸ்கரன் பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின்பேரில் சிறுமியை சீரழித்த தந்தை உள்பட 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+