கொடைக்கானலில் குங்குமப்பூ விளைவித்த விவசாயி! 9 ஆண்டு கால விடா முயற்சி விஸ்வரூப வெற்றி!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்தப்படியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குங்குமப் பூ விளைவித்து விவசாயி சாதனை படைத்துள்ளார்.

9 ஆண்டுகால இடை விடாத முயற்சிக்கு கிடைத்த பலனாக விஸ்வரூப வெற்றிபெற்று நாட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் விவசாயி மூர்த்தி.

A farmer who grew saffron in Kodaikanal

குங்குமப் பூ சாகுபடியை பொறுத்தவரை உலகிலேயே நம்பர் 1 ஈரான் தான். அதற்கு அடுத்தப்படியாக தான் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவின் காஷ்மீர். தரம் வாரியாக குங்குமப் பூவுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. சுத்தமான குங்குமப்பூர் 1 கிராம் ரூ.450 வரை விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையில் சரிபாதியாக குங்குமப்பூ விலை போகிறது. இந்நிலையில் நாட்டிலேயே காஷ்மீருக்கு அடுத்தப்படியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குங்குமப்பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கொடைக்கானலை சுற்றி உள்ள மலை கிராமங்களில் உருளைக்கிழங்கு, பூண்டு, பீட்ரூட், காலி ஃப்ளவர், பீன்ஸ், உள்ளிட்ட பயிர் வகைகள் தான் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் கொடைக்கானல் அருகே உள்ள கவுஞ்சி என்ற மலைகிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்ற விவசாயி, கடந்த 2014ஆம் ஆண்டு காஷ்மீரிலிருந்து குங்குமப் பூ விதை வாங்கி வந்து பசுமைக் குடில் அமைத்து சாகுபடி செய்திருக்கிறார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் பலன் கிடைக்கவில்லை.

ஆனாலும் சோர்வடையாத விவசாயி மூர்த்தி, வேளாண் ஆராய்ச்சி மைய அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் தொடர்ந்து குங்குமப் பூ சாகுபடியை செய்து வந்த நிலையில், இப்போது அவர் எதிர்பார்த்தப்படி கை மேல் நல்ல பலன் கிடைத்துள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய சிறப்பு தகவல் என்னவென்றால், ஒரு ஏக்கர் குங்குமப் பூ சாகுபடி மூலம் ரூ.4 லட்சம் வரை விவசாயி மூர்த்தி வருவாய் ஈட்டியது தான். இதே காய்கறிகள் சாகுபடி செய்திருந்தால் ஒரு ஏக்கர் மூலம் சில ஆயிரங்கள் மட்டுமே வருவாய் வந்திருக்கும்.

கர்ப்பிணி பெண்கள் குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் குங்குமப் பூவை பாலில் கலந்து சாப்பிடுவது உலகம் முழுவதும் வழக்கமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+