திண்டுக்கல்லில் அரசாங்கத்திற்கே தெரியாமல் 3 அணைகள் கட்டிய கரூர்காரர்.. ஆடிப்போன அரசு அதிகாரிகள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கோம்பை அணைக்குச் செல்லும் ஓடையை மறித்து அனுமதியின்றி கரூரைச் சேர்ந்த குணசீலன் என்ற நபர் தடுப்பணைகள் கட்டி உள்ளார். அப்பகுதி விவசாயிகள் அளித்த புகாரின்பேரில், 5 ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு தடுப்பணைகளை அகற்றும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக இறங்கி உள்ளார்கள். சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
அரசுக்கே தெரியாமல் தனிநபர் ஒருவர் தடுப்பணை கட்டியிருக்கிறார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவில் நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கோம்பை அணை பகுதிக்குச் செல்லும் நீரோடை மலைப்பகுதியிலிருந்து வரும் முக்கிய நீர் ஆதாரத்தை தடுத்து கட்டியிருக்கிறார் கரூரைச் சேர்ந்த குணசீலன் என்ற தனிநபர்.

கரூரைச் சேர்ந்த குணசீலன் கோம்பை அணைக்கு செல்லும் நீரோடையின் அருகே நிலம் வாங்கியுள்ளாராம். அவர் தனது நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக அல்லது நிலத்தின் மதிப்பை உயர்த்த, பொதுவான ஓடையை மறித்து அனுமதியின்றி மூன்றுக்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அணைக்கு வரும் நீர் தடைபடும் என அஞ்சும் விவசாயிகள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். அதிகாரிகளின் ஆய்வில் விதிமீறல் உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
விவசாயிகள் எதிர்ப்பு
ஆத்தூரில் உள்ள கோம்பை அணையை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இருக்கின்றன. தனிநபர் ஒருவர் பொது ஓடையை ஆக்கிரமிப்பது தங்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயல் என உள்ளூர் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
விதிமீறல்
பொதுவாக நீர்வளத் துறை அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் எந்தவித முன் அனுமதியும் பெறாமல், இயந்திரங்களைக் கொண்டு ஓடையின் போக்கை மாற்றியது சட்டப்படி குற்றமாகும். இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் பரவியதை அடுத்து, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தலையிட்டது,
ஜேசிபிக்கள் விரைந்தன
வருவாய்த் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் அந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தால், ஆக்கிரமித்து கட்டப்பட்ட தடுப்பணைகளை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தனிநபர் மீது நில ஆக்கிரமிப்பு மற்றும் நீர்நிலைகளைச் சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 5 ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு தடுப்பணைகளை அகற்றும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக இறங்கி உள்ளார்கள்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications