விதம் விதமாக பிரச்சாரம் செய்து வந்த மன்சூர் அலிகான்.. திடீர் உடல் நலக்குறைவு
உடல்நலக்குறைவு காரணமாக மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்: நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார் நடிகர் மன்சூரலிகான். தினம் ஒரு வித்தியாசம்.. தினம் ஒரு தோற்றம்.. தினம் ஒரு யுக்தியில் பிரச்சாரம் செய்து தொகுதி மக்களை ஈர்த்து வருகிறார்.

வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தொகுதிக்குள் சென்று களப்பணியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். அப்போது முதலே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களிலேயே மிக முக்கியமான வேட்பாளராக இவர் தன்னை முன்னிறுத்தி வருகிறார்.
இந்நிலையில், சர்க்கரை நாயக்கனூர், கமலாபுரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பின்னர் அழகம்பட்டியில் மன்சூர் அலிகான் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் அங்கிருந்த கட்சியினரும், பொதுமக்களும் பதட்டமடைந்து உடனடியாக மன்சூர் அலிகானை நிலக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. எனினும், பிரசாரத்தின் போது மன்சூர் அலிகான் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications