பழனிசாமிக்காக பழனி மலையில் பூஜை! கூட்டத்தில் மயங்கிய மூதாட்டி.. டாக்டர் சரவணன் செயலால் நெகிழ்ச்சி.!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில், எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக மருத்துவ அணி மாநில இணைச் செயலாளர் டாக்டர். சரவணன் ஏற்பாட்டில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட்டது. அதிமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் கௌதமி கவுதமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்த நிலையில், டாக்டர்.சரவணன் அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதித்தார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் அவ்வப்போது வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அதிமுக மருத்துவ அணி மாநில இணைச் செயலாளர் டாக்டர்.சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான கவுதமி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

டாக்டர் சரவணன் மற்றும் நடிகை கௌதமி ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்தனர். அப்போது பக்தர்கள் கூட்டத்தின் நடுவே மூதாட்டி ஒருவர் வந்த நிலையில், தங்கத் தேரின் பின்புறம் வரும் போது கூட்ட நெரிசலில் சிக்கினார். தொடர்ந்து கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் நெரிசலில் சிக்கிய மூதாட்டி திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் அங்கிருந்தவர்கள் பலத்த அதிர்ச்சி அடைந்த நிலையில் டாக்டர்.சரவணன் உடனடியாக அந்த மூதாட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தார். சிறிது நேரத்திலேயே அவர் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் தண்ணீர் கொடுத்து அவரை மருத்துவமனைக்கு அனுமதித்தார். தற்போது இந்த காட்சிகளை அதிமுகவினர் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக பேசிய டாக்டர் சரவணன், "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் தான் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்து கல்வியில் இடஒதுக்கீடு கொண்டு வந்தோம். அதேபோல் பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான். ஆனால் தி.மு.க. ஏதோ சாதித்து விட்டதாக புகழ்கிறார்கள். எப்படியும் 2026 தேர்தலில் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமையும்" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கவுதமி,"தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. வருகிற தேர்தலில் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து இறக்குவது என்ற கொள்கையுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளன. எனவே கூட்டணியில் பிரச்சினைக்கு வாய்ப்பே இல்லை. டாஸ்மாக் அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேலும் நடக்குமோ? என்ற அளவில் உள்ளன. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா? என்று பேசுகிற அளவுக்கு தான் நிலைமை உள்ளது.
மக்களுக்கு பாதுகாப்பான வாழ்கை சூழல் இல்லை. விலைவாசி உயர்வு உசத்தில் உள்ளதால் மக்கள் திணறி வருகின்றனர். இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கின்றனர். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசும் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எல்லா துறைகளிலும் பிரச்சினை உள்ளது. ஆனால் தமிழக முதல்-அமைச்சர் ஊட்டியில் குளு, குளு சீசனை அனுபவித்து, மலர்களுடன் போட்டோ எடுத்து கொண்டிருக்கிறார்.
அப்படியென்றால் மக்களின் பிரச்சினைகளை எப்படி புரிந்திருக்கிறார்? என்று தெரியவில்லை. ஆனால் கையில் பேப்பரை வைத்து கொண்டு சிறப்பான ஆட்சி நடக்கிறது என்று மட்டும் கூறுகிறார். மக்களின் வாழ்க்கையே தரைமட்டம் ஆனது இந்த ஆட்சியில் தான்" என்றார்.
-
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications