ஆம்வே நிறுவனத்துக்கு சொந்தமான ரூ 757 கோடி சொத்துகள் முடக்கம்.. அமலாக்கத் துறை அதிரடி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆம்வே நிறுவனத்தின் ரூ 757 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இந்தியாவில் 2000 ஆம் ஆண்டுகளில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் செய்து மக்களிடையே பிரபலமடைந்தது ஆம்வே நிறுவனம். இந்த நிறுவனம் அழகு சாதன பொருட்கள், உடல் ஆரோக்கியம், துணி, பாத்திரம் தேய்க்கும் லிக்விடுகள், புரத பவுடர், மீன் எண்ணெய் மாத்திரை, பல் துலக்கும் பேஸ்ட், பிரஷ் முதல் இரவு பாலில் கலக்கி குடிக்கும் புரத பவுடர் வரை அனைத்தையும் விற்பனை செய்தது.
இந்த நிறுவனத்தில் ஒருவர் சேர்ந்து இந்த பொருட்களை வாங்கி இன்னொருவருக்கு பொருட்களை விற்கலாம். இல்லாவிட்டால் இன்னொருவரை தனக்கு கீழ் பொருட்களை விற்பனை செய்ய சேர்க்கலாம். இதன் மூலம் இவரை சேர்த்தவர், அவரை சேர்த்தவர், அவரை சேர்த்த இன்னொருவர் என கமிஷன் பணம், ஊக்கத் தொகை வந்து கொண்டே இருக்கும்.

பார்ட் டைம் கல்லூரி மாணவர்கள்
வீட்டிலிருந்தபடியே இந்த வேலையை நிறைய பேர் எடுத்து செய்து வந்தார்கள். குறிப்பாக பார்ட் டைம் கல்லூரி மாணவர்கள் இதில் அதிகம் ஈடுபட்டனர். இநத நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ஆம்வே மல்ட்டிலெவல் மார்க்கெட்டிங்கில் முதலீட்டாளர்களின் பணத்தை முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆம்வே நிறுவனம்
மேலும் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை பல நிலை சந்தைப்படுத்துதலில் மோசடிகளும் சட்டவிரோத பணப்பரிமாற்றமும் செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத் துறை கூறுகையில் ஆம்வே நிறுவனம் இந்தியாவில் 2002- 2003 ஆம் ஆண்டு முதல் 2021- 2022 வரை ரூ 27,562 கோடி வசூலித்துள்ளது.

ரூ 7588 கோடி
இதற்காக ரூ 7588 கோடி கமிஷன் தொகையை உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளது. இது தொடர்பான வழக்கில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆம்வே தொழிற்சாலைக் கட்டடம், நிலம், இயந்திரங்கள், வாகனங்கள், வங்கிக் கணக்குகள், வைப்பு நிதி ஆகியவற்றை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

அசையும் அசையா சொத்துகள்
இதில் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ 411 கோடி என்றும் 36 வங்கிக் கணக்குகளில் ரூ 345 கோடி ரூபாய் என்றும் ஆம்வே நிறுவனம் ரூ 21.39 கோடி பங்கு முதலீட்டை இந்தியாவில் 1996- 97 ஆம் ஆண்டு முதல் 2020- 2021 ஆம் ஆண்டு வரை வாங்கியுள்ளது என்றும் இதற்காக ரூ 2,859 கோடி ஈவுத் தொகையாக ஆம்வேவுக்கும் முதலீட்டாளர்களுக்கும் தரப்பப்பட்டுள்ளது என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. ஆம்வேயில் சேருவோர் எவ்வாறு பணக்காரர்களாவது என்பதை பிரச்சாரம் செய்துள்ளதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications