திருப்பரங்குன்றம் மலை முருகனுக்குச் சொந்தமானது.. மசூதியை அகற்ற வேண்டும்! அர்ஜுன் சம்பத் பகீர் பேச்சு
திண்டுக்கல்: திருப்பரங்குன்றம் மலை முருகன் கோயிலுக்கு சொந்தமானது,அதில் ஒரு பகுதியினர் அதனை சிக்கந்தர் மலை என்று கூறி கடா சேவல் வெட்டுவோம் என கூறி வருகின்றனர், மலையில் கைலாசநாதர் கோயில் மலை அடிவாரத்தில் முருகன் கோவில் உள்ளதால் உச்சியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மசூதியை அகற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்ய ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி அளிப்பதில்லை. ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான விசிக காங்கிரஸ் ஆகியவற்றிற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூட அனுமதி அளிப்பதில்லை. தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அல்ல. கொடுங்கோலன் ஜோசப் ஸ்டாலின் தான் ஆட்சி செய்கிறார்.
தமிழகத்தில் தேசிய கல்வி மும்மொழி கொள்கையை அமல்படுத்த இந்து மக்கள் கட்சி சார்பில் தபால் மூலம் கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்பும் நிகழ்வு நடத்தவிருக்கிறோம். கேரளா ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழி கொள்கைகளால் தாய்மொழி பாதிக்கப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் பாதிக்கப்படும் என பொய்யான தகவலை பகிர்ந்து வருகின்றனர். மத்திய அரசின் தாய்மொழி தேசிய கல்வி கொள்கை கொண்ட நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை அரை நிர்வாணத்தில் முற்றுகையிட்டு ஆபாசமான வார்த்தைகள், ஒரு நல்ல அரசியல் செய்வதற்கான தகுதி இல்லை. அதேபோல் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயை பரந்தூர் செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலையை டங்ஸ்டன் குறித்து மக்களிடம் விசாரிக்க அனுமதிக்கவில்லை.
வள்ளுவர் வள்ளலார் ஆகியோரை திமுக தங்கள் திராவிடர் கொள்கையில் சேர்க்க முடியாது. மயிலாப்பூரில் உள்ள 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவள்ளுவர் கோவிலில் திருவள்ளுவருக்கு திருநீறு பூசப்பட்டு காவி உடை அணிவிக்கப்படுகிறது. அதேபோல் மயிலாப்பூரில் நடைபெறும் நாயன்மார்கள் விழாவில் திருவள்ளுவரும் இடம் பெறுவது வழக்கமாக உள்ளது. அதேபோல் வள்ளலார் தனது கருத்துரையில் மது அருந்தக்கூடாது என தெரிவித்துள்ளார் ஆனால் மது கடைகளை வைத்து வியாபாரம் செய்யும் திமுக வள்ளலாரை பற்றி பேசக்கூடாது. வள்ளுவரும் வள்ளலாரும் தங்களது எழுதிய குறள் மற்றும் நூல்களில் சனாதனத்தை குறிப்பிட்டுள்ளனர். ஆகவே திராவிட கொள்கையில் வள்ளலார் மற்றும் வள்ளுவரை இணைத்து அரசியல் செய்யக்கூடாது.
திருப்பரங்குன்றம் மலை முருகன் கோயிலுக்கு சொந்தமானது. அதில் ஒரு பகுதியினர் அதனை சிக்கந்தர் மலை என்று கூறி கடா சேவல் வெட்டுவோம் என கூறி வருகின்றனர். மலையில் கைலாசநாதர் கோயில் மலை அடிவாரத்தில் முருகன் கோவில் உள்ளதால் அங்கு பலியிடுதல் தடை செய்ய வேண்டும். மேலும் உச்சியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மசூதியை அகற்ற வேண்டும். பிப்ரவரி மாதம் திருப்பரங்குன்றம் சென்று போராட்டம் நடத்த உள்ளோம். இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏன் இது குறித்து தகவல் வெளியிடவில்லை.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேருந்து ரயில் ஆகியவற்றை தாக்கியவர்களுக்கு மொழிப்போர் தியாகி என்று பெயரிட்டு அவர்களுக்கு பொதுக்கூட்டங்கள் நடத்துவது கண்டனத்துக்குரியது. மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் மற்றும் பண பயன்கள் வழங்கி வருவதும் கண்டனத்துக்குரியது. கள்ளு என்பது ஒரு வகை உணவு வகை. மருத்துவம் நிறைந்தது. ஆகவே கள்ளுக் கடைகளை தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும்" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications