பிரான் வடை கேள்விப்பட்ருக்கேன்.. இது என்ன பூரான் வடை! குமட்டிக் கொட்டிய குழந்தை.. கொந்தளித்த தாய்..!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிரபல பேக்கரி ஒன்றில் தனது மகனுக்கு வடை வாங்கி கொடுத்த பெண் ஒருவர் அதில் பூரான் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பூரான் வடையை சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் திருச்சி சாலையில் என்ஜிஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் பியூலா. இவர் தனது 3 வயது மகனுடன் அதே பகுதியில் உள்ள பிரபல பேக்கரி ஒன்றுக்கு சென்று இருக்கிறார். டீ சாப்பிட நினைத்தவர் முதலில் தனது மகனுக்கு வடை ஒன்றை சாப்பிட வாங்கி கொடுத்துள்ளார்.

தட்டில் வடை வைத்து அதில் குருமாவை ஊற்றி கொடுத்துள்ளார். பாதி வடையை சிறுவன் சாப்பிட்டு நிலையில் அதற்குள் பூரான் ஒன்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவன் அதனை தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது திடீரென சிறுவனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுவனை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து பியூலா பேக்கரி உரிமையாளரிடம் கேட்டபோது அவர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இந்த நிலையில் வடையில் பூரான் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் பாதிப் பேர் எதையுமே சாப்பிடாமல் கிளம்பினர்.
இந்த நிலையில் இந்த கடையில் மட்டுமல்ல திண்டுக்கல்லில் செயல்படும் பல சாலையோர கடைகளில் இதே நிலைமைதான் நீடிக்கிறது என்று கூறுகின்றனர் பொதுமக்கள். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது மட்டுமல்ல இதற்கு முன்னதாகவும் பல புகழ்பெற்ற உணவகங்களில் புழு, கரப்பான் பூச்சி, கெட்டுப் போன இறைச்சி உள்ளிட்டவற்றுடன் பிரியாணி பரிமாறப்பட்டு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லை பொறுத்தவரை இதுபோல ஏராளமான சாலை ஓர கடைகளில் சுகாதாரமற்ற முறையில் வடை உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சுகாதாரம் என்பது சிறிதளவு கூட கிடையாது. தற்போது மழைக் காலம் என்பதால் பூரான், பல்லி, பூச்சி உள்ளிட்ட விஷப் ஜந்துகள் ஆங்காங்கே ஊர்ந்து வருகின்றன. பெரும்பாலான சாலையோர கடைகளில் உணவுப் பொருட்கள் தரம் இன்றி தயாரிக்கப்படுவதோடு, அவை தயார் செய்யப்படும் கிச்சனும் சுத்தம் இல்லாமல் இருக்கிறது.
இதனால் கவன குறைவாக வடை மாவில் பூச்சிகள் விழும் அபாயம் இருக்கிறது. மேலும் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இனிப்பு காரம் உள்ளிட்டவை தயாரிக்கும் திடீர் கடைகளும் ஆங்காங்கே முளைத்து வருகின்றன. ஆனால் இவையும் சுகாதார மற்றும் முறையில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி தரம் குறைந்த உணவை தயாரிக்கும் கடைகள், விற்பனை செய்யும் நபர்கள் மீது ஊறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
சாலையோர கடைகள் என்று இல்லாமல் திண்டுக்கல்லில் இருக்கும் பிரபல உணவகங்களிலும் இதே பிரச்சினை தான் இருக்கும் நிலையில் குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது அனைத்து உணவகங்கள் டீக்கடைகள் உள்ளிட்டவற்றில் ஆய்வு நடத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications