நத்தத்தில் பயங்கரம்! தம்பியின் மனைவி, இரண்டரை வயது குழந்தையை எரித்துக் கொன்ற அண்ணன்... ஏன் தெரியுமா?
திண்டுக்கல்: நத்தம் அருகே தம்பியின் மனைவியையும் அவரது குழந்தையையும் அண்ணன் எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நத்தம் அருகே மலையூரை அடுத்துள்ள வலசு பகுதியை சேர்ந்தவர் நல்லப்பிச்சன். இவருக்கு கருப்பையா, சிவகுமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். மூத்தவரான கருப்பையா திருமணம் செய்துகொள்ளவில்லை. தம்பி சிவக்குமாருக்கு அஞ்சலை (21) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி மலர்விழி என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது.

தற்போது அஞ்சலை 4 மாத கர்ப்பினியாக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று புளியம்பழம் வியாபாரம் செய்வதற்காக சிவக்குமார் வெளியூர் சென்று இருக்கிறார். மாலை அஞ்சலை அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது விறகு வெட்டுவதற்காக சென்ற சிவக்குமாரின் சகோதரர் கருப்பையா அஞ்சலையிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு அஞ்சலை எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கருப்பையா அவரை அரிவாளால் வெட்டியதாகவும், அதன் பின்னர் அஞ்சலையின் பெண் குழந்தையை கருப்பையா கொலை செய்துவிட்டு தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. தோட்டத்தில் இருந்து திடீரென புகை வருவதை கண்டு சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசர் தீவிர விசாரணை நடத்தியதில் அஞ்சலையையும் அவரது குழந்தையையும் கருப்பையா கொலை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications