திண்டுக்கல் அருகே காரும் லாரியும் மோதி விபத்து.. 4 பேர் பலி
திண்டுக்கல் அருகே நடந்த சாலை விபத்து ஒன்றில் 4 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளார்.
Subscribe to Oneindia Tamil
ண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நடந்த சாலை விபத்து ஒன்றில் 4 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளார். இதில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. பெங்களூரில் இருந்து அந்த கார் வேகமாக வந்து இருக்கிறது. அதிகாலை திண்டுக்கல் பகுதிக்கு வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

முன்னால் சென்ற லாரி மீது வேகமாக சென்று கார் மோதியுள்ளது. இதில் அந்த காரில் இருந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.
வாகனம் கட்டுபாட்டை இழந்து காரணத்தால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக திண்டுக்கல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications