"அந்த பேய் என்னை சாக கூப்பிடுதுப்பா.. போய்ட்டு வரேன்.." லெட்டர் எழுதி வைத்து தூக்கில் தொங்கிய மாணவி
பேய் அழைப்பதாக சொல்லி கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்
திண்டுக்கல்: "அந்த பேய் என்னை சாக கூப்பிடுதுப்பா.. போய்ட்டு வரேன்.." என்று லட்டர் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் லத்திகா... இவர் ஒரு கல்லூரி மாணவி.. இப்போது லாக்டவுன் என்பதால் வீட்டில்தான் இருந்துள்ளார்.. 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு பிறந்தநாள் வந்தது.

அந்த பிறந்த நாளை வீட்டில் உள்ளவர்கள் நல்ல முறையில் கொண்டாடினார்கள்.. லத்திகாவும் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளார்.. அதற்கு பிறகுதான் வீட்டில் உள்ள யாரிடமும் சரியாக பேசவில்லையாம்.
எத்தனையோ முறை கேட்டு பார்த்தும், எந்த பதிலையும் லத்திகா சொல்லவில்லை.. இந்நிலையில், இவர் தன்னுடைய ரூமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்... மகளின் சடலத்தை கண்டு பெற்றோர் கதறி துடித்தனர்.
தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர்.. சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் அனுப்பி விசாரணையையும் ஆரம்பித்தனர்.. அப்போது லத்திகா ரூமில் இருந்த ஒரு லட்டரையும் கைப்பற்றினர்.. தற்கொலை செய்வதற்கு முன் அவர் அந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்.
அதில், ''அப்பா. அம்மா யாரோ என்னை பயமுறுத்திட்டே இருக்காங்க.. நைட் நேரத்துல தூக்கம் வர்றது இல்லை.. நைட் முழுக்க என்னை சாகறதுக்கு வா, வா-ன்னு கூப்பிடறாங்க... இதை வெளியில் யார்கிட்டயாவது சொன்னா எல்லாரையும் கொன்னுடுவேன்னு அந்த பேய் சொல்லுது.. தினமும் என்னை சாக கூப்பிட்டுட்டே இருக்கு.. என்னை ஏதாவது பண்ண சொல்லுதுப்பா.. இல்லைனா நம்ம குடும்பத்தை அழிச்சிடுவேன்னு சொல்லுது.
யாரோ உங்களை வசியம் பண்ணனும்னு நினைக்கிறாங்க.. அதனால என் பொருள், நான் பயன்படுத்திய பொருள் எதையும் வீட்டில் தயவு செய்து வைக்காதீங்க.. எல்லாம் நல்லதுக்குத்தான்.. தம்பி, தங்கச்சி, நீங்க 2 பேரும் அப்பா அம்மாவை நல்லா பாத்துக்கங்க... லவ் யூ மை ஃபேமிலி,'' என எழுதி வைத்துள்ளார்.
Recommended Video
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications