திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் பற்றி அவதூறு பேசிவிட்டார்.. வழக்கு.. திண்டுக்கல் கோர்ட்டில் மு.க ஸ்டாலின் ஆஜராக உத்தரவு!

முதல்வர் பற்றி மு.க.ஸ்டாலின் அவதூறு பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஆஜராகும்படி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: முதல்வர் பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஆஜராகும்படி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக தேர்தல் களம் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

Court summoned M K Stalin for his speech against CM in Dindigul

கடந்த பிப்ரவரி 15ம் தேதி திண்டுக்கல்லில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். திமுக வேட்பாளர்கள் திண்டுக்கல் வேலுச்சாமி, நிலக்கோட்டை சவுந்தரபாண்டியனை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

இதில், ஸ்டாலின் அதிமுகவினர் செய்த ஊழல் குறித்து பேசினார். அதில், அதிமுகவில் ஊழல்வாதிகளின் லிஸ்ட் இருக்கிறது. அதிமுகவில் அதிகம் ஊழல் செய்வது வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர். அதில் நம்பர் 1 ஊழல்வாதி வேலுமணி. ஆனால் முதல்வர் எடப்பாடி இரண்டு அனைத்து லிஸ்டிலும் முதலில் வருவார்.

கொடநாடு கொலைகள் பற்றி பேசுவதை நிறுத்தமாட்டேன்.. எனக்கு பயமில்லை.. ஸ்டாலின் அதிரடி! கொடநாடு கொலைகள் பற்றி பேசுவதை நிறுத்தமாட்டேன்.. எனக்கு பயமில்லை.. ஸ்டாலின் அதிரடி!

முதல்வர் ஒரு காமெடியான ஊழல்வாதி. அந்த கட்சியில் இருக்கும் எல்லோருமே இப்படித்தான், என்று ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசி இருக்கிறார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக அதிமுக சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆஜராக திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏப்ரல் 29ஆம் தேதி நேரில் ஆஜராக திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் பற்றி மு.க.ஸ்டாலின் அவதூறு பேசியதாக இந்த சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.

English summary
Court summoned M K Stalin for his speech against CM in Dindigul in campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X