சம்பந்திக்காக சேராத இடம் சேர்ந்து.. வஞ்சத்தில் வீழ்ந்த எடப்பாடி! வஞ்சகன் மோடி! முத்தரசன் அட்டாக்!
திண்டுக்கல்: எடப்பாடி பழனிசாமி சிக்க கூடாத இடத்தில் தெரிந்தோ தெரியாமலோ சிக்கிவிட்டார் எனவும், சம்பந்தி வழக்கை முடிக்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா எடப்பாடி.. வஞ்சகன் மோடியடா என கண்ணதாசன் பாட்டு பாடி விமர்சித்துள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன்.
தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குகள் சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஐ பி செந்தில்குமாரை ஆதரித்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் ஒன்றாக நாகல்நகர் சந்தைப்பேட்டையில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தின் போது மூத்த தலைவர் முத்தரசன் பேசுகையில்," சொல்லாததையும் செய்வோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என உரிமையோடு கேட்கின்றோம். எடப்பாடி பழனிச்சாமி சிக்க கூடாத இடத்தில் சிக்கிவிட்டார். தெரிந்தோ தெரியாமலோ சிக்கிவிட்டார். சொல்லாததையும் செய்வோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என உரிமையோடு கேட்கின்றோம்.
எடப்பாடி பழனிசாமி சிக்க கூடாத இடத்தில் சிக்கிவிட்டார். தெரிந்தோ தெரியாமலோ சிக்கிவிட்டார். சம்பந்தி வழக்கு முடிக்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா எடப்பாடி வஞ்சகன் மோடியடா. அதிமுகவுக்கு போடக்கூடிய ஓட்டு பிஜேபிக்கு போடக்கூடிய ஓட்டாகும் அது நாட்டைக் காப்பாற்றது தமிழகத்தை காப்பாத்தது உரிமையை காப்பாத்தாது. ஆகவே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்" என பேசினார்.
திண்டுக்கல் தொகுதி அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எதிர்த்து களம் இறக்கப்பட்டுள்ளார் திமுக அமைச்சர் ஐ பெரியசாமியின் மகனான ஐ.பி. செந்தில்குமார். இரு முறை பழனியில் வென்ற இவர் தற்போது திண்டுக்கல்லில் தனது 4வது தேர்தலில் முதல்முறையாக களமிறங்குகிறார்.
ஐபி செந்தில்குமார் திண்டுக்கல் திமுக மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். மேலும், பழனி தொகுதியில் 3 முறை போட்டியிட்டு கடைசி 2 முறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவின் திண்டுக்கல் சீனிவாசன் 1972 முதல் அதிமுக உறுப்பினா், ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட அதிமுக விவசாயப் பிரிவு செயலா், திண்டுக்கல் மாவட்டச் செயலா், மாநிலப் பொருளாளா், மாவட்ட அவைத் தலைவா் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளாா். தற்போது, வழிகாட்டுதல் குழு உறுப்பினா், அமைப்புச் செயலா், திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலா் ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறாா்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications