திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    திண்டுக்கலில் கஜா புயலா? திருச்சி மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை- வீடியோ

    திண்டுக்கல்: திண்டுக்கலில் புயலா.. இதுதான் திண்டுக்கல் பகுதி மக்களின் பேராச்சரியமாக உள்ளது. இது மிக மிக அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.

    வழக்கமாக ஒரு புயலானது கரையைக் கடந்ததுமே வலுவிழந்து போய் விடும். ஆனால் இந்த கஜா புயலானது ஆழ்ந்த புயலாக கரையைக் கடந்து தற்போது புயலாக மாறி திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது.

    இது யாரும் எதிர்பாராதது. தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் ஒன்று திண்டுக்கல். இங்கு புயல் என்பதெல்லாம் மிகப் பெரிய விஷயம்.

    [திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல்.. திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை]

    புயல் அரிய நிகழ்வு

    புயல் அரிய நிகழ்வு

    திண்டுக்கல்லுக்கு புயல் வருவது என்பதெல்லாம் ஒரு அரிய நிகழ்வு. எனவே அந்த வகையில் கஜா புயலானது தற்போது திண்டுக்கல்லுக்கு மேலே மையம் கொண்டிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது அந்த ஊர் மக்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.

    திண்டுக்கல்லுக்கு மேல்

    திண்டுக்கல்லுக்கு மேல்

    திண்டுக்கல் மீது புயல் மையம் கொண்டிருப்பதால் அங்கு பலத்த காற்று வீசி வருகிறது. அதாவது மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக அருகாமையில் உள்ள கொடைக்கானலில் கன மழை கொட்டி வருகிறது.

    கன மழை எச்சரிக்கை

    கன மழை எச்சரிக்கை

    புயல் காரணமாக திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மற்றும் மிக கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    மக்கள் ஆச்சரியம்

    மக்கள் ஆச்சரியம்

    மதுரை, திண்டுக்கல் போன்ற ஊர்களுக்கு புயல் என்பது புதிய விஷயம். ஆனால் கஜா புண்ணியத்தால் திண்டுக்கல் இன்று ஒரு புயலை சந்தித்துள்ளது. திண்டுக்கல் முழுக்க இதே பேச்சாக உள்ளது.

    English summary
    Dindigul people are surprised over the arrival of Cyclone Gaja in their city and surrounding areas are facing strong wind and heavy rains.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X