Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல் பழனி மலைக்கோவிலில் திடீரென ஒலித்த தவெக பாடல்: திகைத்த பக்தர்கள்! விஜய் கட்சியில் யாரது

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது அங்கு அரங்கேறியுள்ள ஒரு சர்ச்சைக்குரிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது தவெகவினர்.. தேர்தல் நேரத்தில் இப்படியொரு சம்பவம் பழனியில் நடக்கும் என்று பக்தர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. போலீஸ் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது...!!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனிக்கு, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

Dindigul Palani Temple Controversy

ஒலிபெருக்கிகள்

இதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் அங்கு செய்யப்பட்டுள்ளன.. பழனி மலைக்கோவில், படிப்பாதை மற்றும் கிரிவலப் பாதைகளில் பக்தர்களின் வசதிக்காக 100-க்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ஒலிப்பெருக்கிகள் மூலம் காணாமல் போகும் குழந்தைகள் குறித்த அறிவிப்புகள், பக்தர்களுக்கான பாதுகாப்பு எச்சரிக்கைகள் மற்றும் குறிப்பிட்ட நேரங்களில் முருகன், விநாயகர், சிவன் போன்ற தெய்வங்களின் பக்திப் பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பப்படுவது வழக்கம்.

ஆன்மீக அதிர்வுகள் நிறைந்த இந்த பாதையில், நேற்று எதிர்பாராத விதமாக தவெகவின் அரசியல் கட்சிப் பாடல் ஒலித்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது..

திண்டுக்கல் பழனி கோயில்

மலையேறும் படிப்பாதையில் இருந்த ஒரு குறிப்பிட்ட ஒலிப்பெருக்கியில், மர்ம நபர் ஒருவர் தவெக கட்சியின் பாடலை ஒலிக்க செய்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய செல்போனை ப்ளூடூத் மூலமோ அல்லது நேரடி இணைப்பு மூலமாக இணைத்து, தவெக பாடலை ஸ்பீக்கரில் ஒலிபரப்பியதாக தெரிகிறது..

அமைதியான முறையில் பக்தி பாடல்களைக் கேட்டுக்கொண்டு மலை ஏறிய பக்தர்கள், திடீரென அரசியல் பாட்டை கேட்டதுமே திகைத்து போனார்கள்.. இந்த சம்பவத்தை அங்குள்ளவர்களே வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டார்கள்.. அந்த காட்சிதான் மிக வேகமாக இணையத்தில் பரவி பலரையும் அதிருப்திக்குள்ளாக்கி வருகிறது.

பழனி கோயில் ஸ்பீக்கர்

பழனி கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒலிப்பெருக்கி அமைப்பில், ஒரு தனிநபர் எப்படி இப்படி செல்போனை இணைக்க முடிந்தது? என்று தெரியவில்லை.. இது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பெரும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.

அதேபோல இந்த சம்பவம் மேலும் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளது.. ஒட்டுமொத்த கோவில் நிர்வாகத்தின் மைய கன்ட்ரோல் ரூமிலிருந்து இந்தப் பாடல் ஒலிக்கப்பட்டதா அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ள ஸ்பீக்கரில் மட்டும் தொழில்நுட்பக் கோளாறைப் பயன்படுத்தி இது செய்யப்பட்டதா? என்றும் தெரியவில்லை.. எனவே இது குறித்துக் கோவில் நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.

சிசிடிவி காட்சி - யாரந்த நபர்

ஒருவேளை மையக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒலிபரப்பப்பட்டிருந்தால், அது பழனி அடிவாரம் முழுவதும் கேட்டிருக்க வாய்ப்புள்ளது. ஆனால், முதற்கட்டத் தகவல்களின்படி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஒலிப்பெருக்கியில் மட்டுமே இந்த அத்துமீறல் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனினும், இந்த சம்பவம் ஆன்மீகத் தலத்தின் புனிதத்தைக் கெடுக்கும் செயல் எனப் பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவில் நிர்வாகமும் காவல் துறையும் இந்த விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளன. கோவிலுக்குள் உள்ள ஒலிப்பெருக்கி அமைப்பில் அத்துமீறி நுழைந்து, அரசியல் பாடல்களை ஒலிக்கச் செய்த அந்த இளைஞர் யார் என்பதை சிசிடிவி காட்சிகளை கொண்டு காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

புனிதமான மலைக்கோவில் வளாகத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றும், சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணியினர் மற்றும் பல்வேறு ஆன்மீக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

விஜய் - இதையெல்லாம் கண்டிப்பாரா

இந்த இடத்தில் விஜய்யின் தவெக பற்றியும் நாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது... முதல்முறையாக அந்தா கட்சி தேர்தலில் போட்டியிட போகிறது.. அந்த கட்சியின் வாக்கு சதவீதம் எவ்வளவு என்றுகூட தெரியாது..

அப்படியிருக்கும்போது, அரசியல் கட்சிகளின் பாடல்கள் இதுபோன்று பொதுமக்களுக்கு இடையூறாகவோ அல்லது புனிதத் தலங்களிலோ ஒலிக்கப்படுவது அந்தக் கட்சிக்கு நற்பெயரை தராது... இத்தகைய அத்துமீறல்கள் கட்சி தலைமையின் அனுமதியின்றி ஆர்வக்கோளாறால் சில தொண்டர்கள் செய்தாலும், அது ஒட்டுமொத்தக் கட்சியின் மீதான பொதுமக்களின் பார்வையை எதிர்மறையாக மாற்றும்...

குறிப்பாக ஆன்மீக உணர்வு கொண்ட மக்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தும்... அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு என்பதை உணராமல் பொது இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தேவையற்ற அரசியல் சர்ச்சைகளுக்கும், சட்ட ரீதியான சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வது கட்சித் தொண்டர்களின் கடமையாகும்.. அவர்களை கட்டுக்குள் வைப்பது விஜய்யின் பொறுப்பாகும்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+