'ஐயையோ தெரியாதனமா திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டேன்.. என்னய எப்படியாச்சும் காப்பாத்துங்கடா'
திண்டுக்கல்: ஐயையோ தெரியாதனமா திண்டுக்கல் பஸ் ஸ்டண்டுக்கு வந்துட்டேன்... என்னய எப்படியாச்சும் காப்பாத்துங்கடா... என்று வடிவேலு மீம்ஸ் ஒன்று வேகமாக பரவி வருகிறது. உண்மையில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டு ஏன் இந்த அளவிற்கு கலாய்க்கப்படுகிறது என்பது அந்த ஊரை தாண்டி சென்ற அத்தனை பேருக்கும் தெரியும். அதை நாம் இப்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் திண்டுக்கல் மாநகரம் தவிர்க்க முடியாத பட்டியலில் இருக்கும். தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் எல்லாமே திண்டுக்கல் வந்து தான் போக முடியும். இதேபோல் கொடைக்கானல், சபரிமலை, தேனி, பழனி போக வேண்டும் என்றாலும் திண்டுக்கல் தாண்டிதான் போக வேண்டும்.

அதேபோல் கோவை, திருப்பூர், ஈரோடு , கரூர், நாமக்கல், சேலம் போன்ற மேற்கு மாவட்டங்களை மதுரை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை போன்ற பகுதிகளை இணைக்கும் முக்கியமான ஊராக திண்டுக்கல் இருக்கிறது. திண்டுக்கல் வழியாகவே கன்னியாகுமரி- காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தென்மாவட்டங்களில் இருந்து பெங்களூரு, ஹைதரபாத், மும்பை செல்ல திண்டுக்கல் வழியாகத்தான் போக முடியும்.
திண்டுக்கல் மாநகரம் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தில் மட்டுமல்ல தொழில் ரீதியாகவும் மிக முக்கியமான நகரமாகும். திண்டுக்கல் நகரில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. மக்கள் தொகையும் மிக அதிகமாகும். ஆனால் திண்டுக்கல் மாநகரம் மிகப்பெரிய அளவில் வளர்ந்த போதும், அங்கு அடிப்டை கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் மேம்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

குறிப்பாக திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் கழிவறை நாத்தத்திற்கு மிகப்பிரபலம். திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்டில் கழிவறைகள் மிகமிக மோசமாக இருக்கும். கழிவறை பராமரிப்பு என்பது சுத்தமாக இருக்காது. அங்குள்ள கட்டண கழிப்பறைகள் பார்த்தால் வாந்தி வந்துவிடும். இதுஒருபுறம் எனில் பேருந்து நிலையத்தில் உள்ள ஓபன் கழிவறை காரணமாக பேருந்தில் ஏற செல்லும் மக்கள் நாற்றம் தாங்க முடியாமல் தவிக்கிறார்கள்.இதோ சில நாட்கள் இப்படி இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள்.
பல வருடங்களாக இப்படித்தான் இருக்கிறது. திண்டுக்கல் வந்துவிட்டது என்பதை பேருந்தில் உள்ளவர்கள் கழிவறை நாற்றத்தை வைத்து அறிந்துவிடலாம். அவ்வளவு மோசமாக இருக்கும். திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் திறந்த வெளி கழிப்பறைகளை முழுவதாக மூடுவதுடன், கட்டணக்கழிப்பறைகளை மாற்றி சிறப்பாக கட்டிடத்தில் அதனை பராமரித்தால் தான் மூச்சுக்கூட விட முடியும் என்ற நிலை இருக்கிறது என்று மக்கள் கூறுகிறார்கள்.

அதனால் தான் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்டை வைத்து மீம்ஸ் போடும் அளவிற்கு மோசமாக உள்ளது. இனியாவது திண்டுக்கல் பேருந்து நிலையத்தினை சிறப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications