திண்டுக்கல்லில் 2 நாட்கள் மூடப்படும் டாஸ்மாக்..தீபாவளி அதுவுமா மது பிரியர்களுக்கு ஷாக்! என்ன காரணம்?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எல்லையோரத்தில் அமைந்துள்ள, அரசு மதுபானக் கடைகள், அத்துடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மனமகிழ் மன்றத்தில் அமைந்துள்ள மதுபானக் கூடம் ஆகியவற்றை 29 மற்றும் 30ஆம் தேதி மாலை 5.00 மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி.
தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.
குறிப்பாக புத்தாண்டு தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை மிக அதிக அளவில் இருக்கும். குறிப்பாக தீபாவளி சந்தர்ப்பத்தில் 3 அல்லது 4 நாட்களிலேயே தமிழ்நாட்டில் ரூ.750 கோடிக்கும் அதிகமான விற்பனை நடக்கும். புத்தாண்டு, பொங்கல் சமயங்களிலும் டாஸ்மாக் விற்பனை சாதனை எண்ணிக்கையை கடக்கும். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 180 மில்லி, 360 மில்லி, 720 மில்லி அளவுகளில் மதுபானங்கள் விற்கப்படுகிறது.
இதுதவிர தனியார் மதுபான பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்கள், பப்புகள் என தனியாக உள்ளன. இந்த மதுக்கடைகள் எல்லாம் வருடத்தில் சில முக்கியமான நாட்கள் மூடப்படுவது வழக்கம். அதாவது ஜனவரி 15, ஜனவரி 26, மே 1, வள்ளலார் தினம், சுதந்திர தினம், அக்டோபர் 2, மே 1 தொழிலாளர் தினம் என குறிப்பிட்ட நாட்கள் மூடப்படும். இது தவிர குறிப்பிட்ட சில தினங்களில் டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபானக்கடைகளை மூட சூழ்நிலைக்கேற்ப மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிடுவார்கள்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை வரும் நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி திண்டுக்கல் எல்லை பகுதிகளில், டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள், கிளப் சார்ந்த பார்கள் செயல்பட சென்னை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள மதுக் கடைகளை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக திண்டுக்கல் ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை தினம் 30-ம் தேதி அனுசரிக்கப்பட இருப்பதால், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட எல்லையோரத்தில் அமைந்துள்ள, அரசு மதுபானக் கடைகள், அத்துடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மனமகிழ் மன்றத்தில் அமைந்துள்ள மதுபானக் கூடம் ஆகியவற்றை 29-ம் மற்றும் 30-ம் தேதி மாலை 5.00 மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது .
அதன்படி, அம்மையநாயக்கனுார் பகுதியில் கொடைரோடு(கடை எண் 3161), மாலையகவுண்டன்பட்டி(கடை எண் 3162), பள்ளபட்டி சிப்காட்(கடை எண் 3342), கொடைரோடு (எப்எல் 2 உரிமம் எண் 38/2020-2021(பார்), விளாம்பட்டி பகுதியில் கிருஷ்ணாபுரம்(கடை எண் 3345), விளாம்பட்டி(கடை எண் 3343), அணைபட்டி(கடை எண்3341), விருவீடு பகுதியில் ரெங்கப்பநாயக்கன்பட்டி(கடை எண் 3318), விருவீடு (கடை எண் 3344) ஆகிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகள், மதுபானக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும், என ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications