திண்டுக்கல்லில் தங்கம் நகையை கழட்டிய நபர்.. கேமராவில் யாருனு பார்த்தால்? ஆடிப்போன போலீஸ்.. அட கடவுளே
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வீடு புகுந்து தங்க நகைகளை அபகரித்துள்ளார் இளைஞர் ஒருவர்.. அந்த வீட்டில் மூதாட்டியை தவிர வேறு யாருமே இல்லாத நிலையில், அவரது கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்து கொண்டு ஓடியிருக்கிறார். இப்போது அந்த திருடனை போலீசார் சுற்றிவளைத்து பிடித்துவிட்டார்கள். அவரிடம் விசாரணையும் நடத்தியிருக்கிறார்கள். அப்போதுதான் உணர்ச்சிப்பெருக்கில் பல்வேறு தகவல்களை போலீசாரிடம் இளைஞர் சொல்லி உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்.. இவரது மனைவி பெயர் சிவானந்தம்.. 68 வயதாகிறது.. கடந்த மார்ச் 16ம் தேதி காலை பழனியப்பன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, வீட்டில் சிவானந்தம் மட்டும் தனியாக இருந்தார்.. அந்த நேரத்தில் திடீரென ஒரு இளைஞர் வீட்டுக்குள் புகுந்துவிட்டார்.. பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து, சிவானந்தத்திடம் காட்டி மிரட்டி, தங்க நகைகளை கழட்டி தருமாறு கேட்டார்.. கழுத்தில் சிவானந்தம் ஒன்றே கால் பவுன் தங்கச்செயின் அணிந்திருந்தார்..
காதை அறுத்து செயினை பறித்த திருடன்
பிறகு அந்த செயினை இளைஞர் வேகமாக பிடித்து இழுத்தார்.. ஆனால், காதில் அணிந்திருந்த கம்மலில், செயின் சிக்கிக்கொண்டு விட்டது.. ஆனாலும், வலுவாக செயினை பிடித்து இழுத்ததில் காது அறுந்துவிட்டது.. அத்துடன் செயினும் பாதியாக அறுந்துவிட்டது.. கையில் கிடைத்த அறுந்த தங்கச்செயினுடன் பைக்கில் இளைஞர் தப்பி சென்றுவிட்டார்.
இதையடுத்து, இந்த திருட்டு சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசில் தகவல் அளிக்கப்பட்டது.. போலீசாரும் விரைந்து வந்து படுகாயமடைந்த சிவானந்தத்தை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. திருடனை கண்டுபிடிக்க, தனிப்படையையும் அமைத்தனர்.. அத்துடன், சிவானந்தம் வீட்டுப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
கேமராவில் அடையாளம் தெரிந்தது
அப்போது, செயின் பறித்த நபரின் அடையாளம் தெரிந்தது.. வேடசந்தூர் அருகே குஞ்சுவீரன்பட்டியை சேர்ந்த 28 வயது சக்திவேல் என்பவர்தான் நகையை பறித்து சென்றது உறுதியானது.. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, விசாரணையும் மேற்கொண்டனர்.
சக்திவேல் டிப்ளமோ முடித்திருக்கிறாராம்.. வேடசந்தூர் அருகேயுள்ள நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளார்.. ஆனால், போதுமான வருமானம் இல்லாமல், கடன் வாங்கியிருக்கிறார்.. அந்த கடனையும் அவரால் செலுத்த முடியவில்லை.. மற்றொருபக்கம் குடும்பமும் வறுமையில் சிக்கி கொண்டுவிட்டது. பணக்கஷ்டம், கடன் தொல்லை, குடும்ப வறுமை காரணமாக முதன்முறையாக திருடலாம் என்று முடிவு செய்தாராம். அதனால்தான், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சாரி மேடம்... பைனான்ஸ் பிரச்சனை
அதுமட்டுமல்ல, சிவானந்தத்திடம் தங்க செயினை பறித்த குற்ற உணர்ச்சி தாங்காமல், "சாரி மேடம்... பைனான்ஸ் பிரச்சனை... அதான் உங்க நகையை பறிச்சுட்டேன்" என்று மன்னிப்பு கடிதம் எழுதி ஏற்கனவே கையில் வைத்திருந்தாராம்..
ஆனால், நகை பறிப்பின்போது, சிவானந்தம் சத்தம் போட்டதுமே, அவசரத்தில் கடிதத்தை கொடுக்காமல் தப்பி சென்றுவிட்டாராம்.. தங்கச்சங்கிலி பறித்த குற்ற உணர்ச்சி தாங்க முடியாமல், தான் செய்தது தவறு என்று கண்ணீருடன் மன்னிப்புக்கடிதம் எழுதி அவரது சட்டை பையில் வைத்திருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
சக்திவேலிடம் இருந்த அந்த மன்னிப்பு கடிதத்தையும், அவரிடம் இருந்த செயினையும் போலீசார் கைப்பற்றியிருக்கிறார்கள்.. முதல்முறையாக மன்னிப்பு கடிதத்துடன் திருட போன சக்திவேல், இப்போது ஜெயிலில் உள்ளார்..!!












Click it and Unblock the Notifications