டெல்லிக்கு ராஜாவானாலும் நான் பள்ளிக்கு பிள்ளைதான்- திண்டுக்கல் திமுகவினரை சந்தித்த ஐ.லியோனி குசும்பு
திண்டுக்கல்: திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, திண்டுக்கல் மாவட்ட கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி, திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி நிய்மிக்கப்பட்டார்.

போஸ்டர்கள் கிழிப்பு
இதற்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல் ஐ.லியோனி போஸ்டர்கள் ஒட்டினார். இந்த போஸ்டர்களில் திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகளான துணைப் பொதுச்செயலாளர் ஐ பெரியசாமி, மாவட்ட செயலாளர் ஐபி செந்தில்குமார், சக்கரபாணி ஆகியோரது பெயர்கள் இடம்பெறவில்லை.

லியோனி தந்த விளக்கம்
இதனால் ஆத்திரம் அடைந்த திமுக தொண்டர்கள், ஐ. லியோனியின் போஸ்டர்களில் அவரது படத்தையும் பெயரையும் மட்டும் கிழித்து எறிந்தனர். இது மிகப் பெரும் சர்ச்சையானது. பின்னர் இது தொடர்பாக விளக்கம் அளித்த லியோனி, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் பெயர் விடுபட்டதற்கு நான் பொறுப்பு அல்ல என்றார். பின்னர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து சுவரொட்டி வெளியிட்டார்.

திண்டுக்கல் ஐ.பெரியசாமியுடன் சந்திப்பு
இதன்பின்னர், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் லியோனி. இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில், திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பேற்ற பின் அரசியலிலும் அதற்கு அப்பாற்பட்ட நிலையிலும் என்மீது குடும்ப பாசம் காட்டி என்னை உருவாக்கிய எனது ஆருயிர் அண்ணன் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் I.பெரியசாமி அவர்களை என் குடும்பத்தோடு சந்தித்து வாழ்த்து பெற்றேன் என பதிவிட்டிருந்தார்.

ஐபி செந்தில்குமாருடன் ஐ லியோனி சந்திப்பு
இதனிடையே இன்று டெல்லிக்கு ராஜாவானாலும் பள்ளிக்கு பிள்ளைதான் திமுக வின் கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பேற்ற நான் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் திமுகவின் அடிப்படை உறுப்பினர்.எனது மாவட்டச் செயலாளர் அருமை தம்பி Senthil Periasamy என்னை வாழ்த்தியது தாய் வீட்டில் எனக்கு கிடைத்த பாராட்டு என ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் லியோனி. லியோனியை விமர்சித்த திமுக் தொண்டர்கள், நீ டெல்லிக்கு ராஜாவானாலும் இந்த மாவட்டத்துக்கு சாதாரண தொண்டன் என பதிலடி தந்தனர். இதனை சுட்டிக்காட்டியே லியோனியும் இன்று பதிவிட்டிருக்கிறார்.
-
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
உதயநிதி ஸ்டாலினை மதிக்காத கேஎன் நேரு? எழுந்து நின்றும் கண்டுகொள்ளவில்லையே.. இருவருக்கும் சண்டையா? -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
“பைத்தியக்காரத்தனம்”.. திமுக சட்ட எரிப்பைக் கிண்டல் செய்த பெரியார்? கெடு விதித்த அண்ணா! -
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு.. விஜய் எதுவும் கருத்து சொன்னாரா? மருத்துவர் ஷர்மிளா கேட்ட கேள்வி!












Click it and Unblock the Notifications