திண்டுக்கல் பழனியம்மாளின் கள்ளக்காதல். அப்பாவி போல் நடித்து கணவனின் கழுத்திலேயே.. மிரண்ட போலீஸ்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சொக்குபிள்ளை பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கூலி தொழிலாளியாவார். இவரது மனைவி பழனியம்மாள். பழனியம்மாளுக்கும், அதே ஊரைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் திருமணத்தை மீறிய கள்ளக்காதல் இருந்து வருகிறதாம். இந்நிலையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்த மனைவி செய்த காரியம் ஊரையே ஆடிப்போக வைத்துள்ளது. அப்பாவி கணவனுக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கள்ளக்காதல் விவகாரங்கள் பெரும்பாலும் சமூகத்தில் சிக்கலை ஏற்படுத்துகிறது. கள்ளக்காதல் என்பது சமூகத்தின் சாபக்கேடாக இருக்கிறது. திருமணத்தை மீறி உறவினை சட்டப்பூர்வமாக தண்டிக்க முடியாத நிலை இருக்கிறது.ஒருவர் திருமணத்தை மீறி இன்னொருவருடன் தொடர்பில் இருந்தால், அவரை திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தால், சட்டப்படி கேள்வியே கேட்க முடியாத நிலை இருக்கிறது.

விவாகரத்து
அதேநேரம் விவகாரத்து வாங்கி கொண்டு பிரிந்து செல்லவேண்டும் என்பதாக இருக்கிறது. ஆனால் இதனை சமூகத்தில் பலரும் ஏற்பது இல்லை.. அதேநேரம் கள்ளக்காதலர்கள் தாங்கள் ஒன்று சேர எந்த எல்லைக்கும் போகிறார்கள். அப்படியான சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நடந்துள்ளது.
கள்ளக்காதல்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சொக்குபிள்ளை பட்டியை சேர்ந்த 45 வயதாகும் மாரியப்பன் என்பவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி பழனியம்மாளுக்கு 35 வயது ஆகிறது. நன்றாக சென்ற இவர்களது வாழ்க்கை கள்ளக்காதலால் புயல் வீசியது. பழனியம்மாளுக்கும், அதே ஊரை சேர்ந்த சூர்யா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதன் காரணமாக மாரியப்பன், பழனியம்மாள் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மயங்கி விழுந்த மாரியப்பன்
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரியம்மாள் பழனியம்மாள் தம்பதி தங்கள் ஊரில் வீட்டை காலி செய்து நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டிக்கு குடிபெயர்ந்தனர். சிலுக்குவார்பட்டியில் புதிதாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று மாரியப்பன் வீட்டில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் மாரியப்பனை உறவினர்கள் சேர்த்துள்ளனர். அப்போது மாரியப்பனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கழுத்தில் காயங்கள்
கழுத்தில் காயங்கள் இருந்த காரணத்தால் இது குறித்து மருத்துவமனை தரப்பில் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்யபிரபா தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு சென்று மாரியப்பனின் உடலை பார்த்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது கழுத்தில் காயங்கள் இருந்ததை கண்டனர் . இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிக்கியது எப்படி
பின்னர் சந்தேகத்தின் பேரில், பழனியம்மாளை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பழனியம்மாளும், சூர்யாவும் சேர்ந்து மாரியப்பனின் கழுத்தை நெரித்து கொலை செய்தது உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, பழனியம்மாள், சூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை, மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் திண்டுக்கல் நிலக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications