அண்டர்டேபிள் டீலிங்.. பெட்டி பெட்டியாய் பணம்! கட்டி கட்டியாய் தங்கம்! விஜிலன்ஸில் சிக்கிய செல்வசேகர்
திண்டுக்கல்: வருமானத்தை விட பல மடங்கு அதிக அளவில் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள திண்டுக்கல் கனிமவளத்துறை உதவி இயக்குநர் செல்வசேகரனின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வருமானத்தை விட 270 சதவீதம் சொத்து சேர்த்ததாகவும், அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததோடு, தோழிகளுக்கு சுமார் 1.15 மதிப்பில் வீடு வாங்கிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கும் நிலையில், அவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த தாமஸின் மகனான செல்வசேகர் (வயது 57) கனிமவளத்துறையில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த காலங்களில் கன்னியாகுமரி, தஞ்சாவூர், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் கனிமவளத்துறை உதவி இயக்குநர் பதவியில் உள்ளார். இந்நிலையில், 2015 முதல் 2022 வரையிலான ஏழு ஆண்டுகளில் செல்வசேகர் பெற்றுள்ள வருமானம் மற்றும் அவரின் சொத்து அளவில் பெரும் வேறுபாடு இருப்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது.

திண்டுக்கல் அதிகாரி
அதன்பேரில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கண்காணிப்பில் வைத்தனர். விசாரணையில், செல்வசேகர் அதிகாரப்பூர்வ வருமானமாக ரூ.1 கோடியே 3 லட்சத்து 76 ஆயிரம் மட்டுமே பெற்றிருந்தும், அதனை விட ரூ.3 கோடியே 22 லட்சத்து 95 ஆயிரம் வருமானத்தை சேர்த்திருப்பது கண்டறியப்பட்டது. இது அவரது வருமானத்தை விட சுமார் 270 சதவீதம் அதிகம் என்பதால் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கனிமவளத்துறை
ரூ.2 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு ஆவணங்கள் சேகரிக்கப்பட்டது. அதன் பின்னர் செல்வசேகர் மற்றும் அவரது மனைவி முருகம்மாள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. செல்வசேகரின் குடும்பம் திருநெல்வேலி மாவட்டம் வீமா சதுக்கம், மகிழ்ச்சிநகர் அருகே உள்ள பங்களாவில் வசித்து வந்தது. ஆனால் செல்வசேகர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள ஏழுமலையான் நகரில் வாடகை வீட்டில் தனியாக தங்கி இருந்தார். இதையடுத்து, நேற்று அதிகாலை முதல் திருநெல்வேலி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
செல்வசேகரன்
திருநெல்வேலியில் கூடுதல் எஸ்பி மெஸ் கலரின் எஸ்கால், இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங் தலைமையிலான குழு சோதனையில் ஈடுபட்டது. சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து விவரங்கள், வங்கிக் கணக்கு பதிவுகள் உள்ளிட்ட பல முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், செல்வசேகர் பல குவாரிகளை பினாமி பெயரில் நடத்தி வருவதாகவும், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏஜென்சி மூலம் வருமானம் ஈட்டுவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஊழல் வழக்கு
கூடுதலாக, நெல்லை கே.டி.சி. நகரில் உள்ள தனது தோழிகளுக்கு ரூ.1.15 கோடி மதிப்பிலான வீடு வாங்கிக் கொடுத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, கனிமவளத்துறையில் "நடை சீட்டு" வழங்கும் போது வரும் ஒவ்வொரு OTPக்கும் ரூ.2,000 லஞ்சம் வாங்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. மேலும் சில அதிகாரிகளும் இந்த வழக்கில் விசாரணை வளையத்துக்குள் வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications