600/600 சாதனை இல்லை! அப்பா இறந்தன்னைக்கு கிரிஜா தேர்வு எழுதியதுதான்! திண்டுக்கல் நந்தினி கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்களை நான் பெற்றது சாதனை அல்ல, இறந்த அப்பாவின் உடலை வீட்டில் வைத்துக் கொண்டு தேர்வு எழுதிய மாணவி கிரிஜாவின் சாதனைதான் பெரிய சாதனை என திண்டுக்கல் மாணவி நந்தினி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் அரசு உதவி பெறும் அண்ணாமலையார் பள்ளியை சேர்ந்தவர் நந்தினி. தந்தை சரவணக்குமார் ஒரு தச்சுத் தொழிலாளி. அவரது தாய் பானுப்பிரியா இல்லத்தரசி. மாணவி நந்தினி 10 ஆம் வகுப்பில் 491 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.

Dindigul Nandhini praises Cuddalore Girija

இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்களை பெற்றுள்ளார். அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஐ பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் மாணவிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தற்போது இந்த மாணவி குடும்ப சூழலிலும் இத்தனை மதிப்பெண்களை பெற்று இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளார். இதனால் அவருக்கு உலகெங்கும் உள்ள தமிழர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். அவர் தற்போது கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் பிரொஃபஷனல் அக்கவுண்டிங் சேர்ந்துள்ளார்.

அவரை பல்வேறு டிவி சேனல்கள் பேட்டி எடுத்து வருகிறார்கள். சின்ன வயது முதல் அப்பா குடும்பத்திற்காக படும் கஷ்டத்தை பார்த்து நன்றாக படித்து அவர்களை நல்லபடியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்கு படிப்பு ஒன்றுதான் தீர்வு என நந்தினி நினைத்ததாக தெரிவித்தார். 600 க்கு 600 மதிப்பெண்களை தான் பெற்றிருந்தாலும் அது சாதனை அல்ல என்ற அந்த மாணவி கூறியுள்ளார்.

Dindigul Nandhini praises Cuddalore Girija

இதுகுறித்து பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு நந்தினி அளித்த பேட்டியில் நான் 600- க்கு 600 வாங்கியதெல்லாம் ஒரு சாதனையே இல்லை. ஆனால் கெமிஸ்ட்ரி தேர்வு அன்று இறந்த அப்பாவின் உடலை வீட்டில் வைத்துக் கொண்டு தேர்வு எழுத சென்ற மாணவி கிரிஜாவின் மன தைரியத்தை பாராட்டுகிறேன். அந்த சோகத்திலும் அவர் தேர்வில் 81 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

மொத்தமாக அவர் 479 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இது பெரும் சாதனை. எல்லாரும் கிரிஜாவை ஃபோகஸ் செய்ய வேண்டும் என்றார். பின்னர் கிரிஜாவுடன் நந்தினி வீடியோ காலில் பேசினார். அப்போது கிரிஜா , நந்தினிக்கு வாழ்த்துகளை சொன்னார். உடனே நந்தினி நான் செய்தது ஒன்றுமே இல்லை. அப்பா இறந்த அன்று கூட தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதினீர்கள், உங்கள் மன தைரியத்தை நான் பாராட்டுகிறேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Dindigul Nandhini praises Cuddalore Girija

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற பிளஸ் 2 மாணவி ஏப்ரல் 3 ஆம் தேதி வேதியியல் பாடம் தேர்வு எழுதினார். அன்று அதிகாலைதான் அவருடைய தந்தை ஞானவேல் திடீரென உடல்நலக் குறைவால் காலமானார். தந்தையின் இறப்பால் கண்ணீரில் மூழ்கிய கிரிஜா, தந்தையின் ஆசையை நிறைவேற்ற பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதினார். இவர் 479 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவிக்கு உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+