திண்டுக்கல் வீட்டு மாடியில் வந்த குறட்டை சத்தம்.. இருந்த பெரிய உருவம்.. பெண்ணுக்கு ட்விஸ்ட்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் கடைவீதியில் வசித்து வரும் பஷீர் என்பவரது வீட்டின் மாடியில் நேற்று வடமாநில வாலிபர் ஒருவர் தூங்கி கொண்டிருந்தார். அவரை எழுப்பிய போது போதையில் உளறியுள்ளார். இதை பார்த்து ஆடிப்போன பஷீரின் மனைவி போலீசுக்கு தகவல் கொடுத்தார், போலீசார் வந்து அவரை எழுப்பி விசாரிக்க முயன்றனர் ஆனால் முழு போதையில் இருந்ததால் அவருக்கு சுயநினைவே இல்லை.. அண்மையில் அந்த பகுதியில் திருட்டு நடந்திருந்தது. எனவே அவர் திருடனா என்பது தெரியவில்லை.
திருடர்கள் சில நேரங்களில் திருட வந்த அசதியில் தூங்கிவிடுகிறார்கள். இப்படியான சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது.குறிப்பாக முழு போதையில் திருட வரும் திருடர்கள் , போதையில் ஒரு கட்டத்தில் மயங்கி விடுகிறார்கள். அப்படி மயங்கி பின்னர் கையும் களவுமாக வீட்டின் உரிமையாளர்களிடம் சிக்கி விடுகிறார்கள்.இன்னும் சில பகுதிகளில் சில வட மாநில வாலிபர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் சிலர் ஃபுல் பாதையில் நோட்டம் விடுகிறார்கள். அப்படி நோட்டம் விட்டவர்கள், யாருக்கும் தெரியாமல் மாடிகளில் ஏறி தூங்கிய சம்பவங்களும் நடந்துள்ளது. அப்படி தான் ஒருவர் சிக்கியுள்ளார்.

வேடசந்தூர் வீடு
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் கடைவீதியில் 50 வயதாகும் பஷீர் என்பவர் வசித்து வருகிறார் இவரது மனைவி நேற்று காலை மொட்டை மாடியில் துணியை காய வைக்க சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு வடமாநில வாலிபர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். இதைக்கண்ட அந்த பெண் கத்தி கூச்சலிட்டிருக்கிறார்.
போலீஸ் வருகை
இதையடுத்து பஷீர் மற்றும் அக்கம், பக்கத்தினர் அந்த மாடிக்கு சென்று அந்த வாலிபரை எழுப்பி உள்ளார்கள். ஆனால் அவர் மது போதையில் உளறியபடி எழுந்திருக்க முடியாமல் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
முழு போதை
பின்னர் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்த முயன்றனர். இருப்பினும் போதையில் இருந்த காரணத்தால், அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் பஷீர் வீட்டின் அருகே உள்ள ஒரு ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்திருந்தது.
திருடனா அவர்
இதனால் அந்த கடையில் திருடுவதற்கு வந்த இந்த வடமாநில வாலிபர் போதையில் தூங்கினாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என அவர் முழுமையாக தெளிந்த பிறகு தான் தெரியவரும் என போலீசார் கூறினார்கள். இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications