வடை சுட்டும், வயலில் இறங்கி நாற்று நட்டும் வாக்கு கேட்ட திண்டுக்கல் பாமக வேட்பாளர் திலகபாமா
திண்டுக்கல் : வடை சுட்டும், வயலில் இறங்கி நாற்று நட்டு வாக்கு சேகரித்தார் திண்டுக்கல் பாமக வேட்பாளர் திலக பாமா.. அவர் பிரச்சாரத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து பேசினார்.
திண்டுக்கல் லோக்சபா தொகுதியை பொறுத்தவரை விவசாயம் மட்டுமல்லாமல் ஓரளவு தொழில் வளமும் உள்ள பகுதிகளை கொண்ட தொகுதியாக உள்ளது. இங்கு கடந்த முறை களம் இறங்கிய திமுக மிக எளிதாக வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை களம் இறங்கவில்லை.. அதற்கு பதில் திமுக தனது கூட்டணி கட்சியான மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுத்துவிட்டது. திண்டுக்கல் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்டச் செயலாளருமான ஆர்.சச்சிதானந்தம் போட்டியிடுகிறார்.

பாஜக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதி பாமகவிற்கு வழங்கப்பட்டுள்ளது. பாமக சார்பில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்தவரான பாமகவின் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா போட்டியிடுகிறார். திண்டுக்கல் தொகுதியில் கணிசமான அளவு வன்னியர்கள் இருப்பதால் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இவர் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக முயற்சிக்கிறார். ஒவ்வொரு நாளும் புதுவிதமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் தெருவோரம் வடை சுடுவோருடன் இணைந்து வடை சுட்டு வாக்கு சேகரித்தார். அடுத்ததாக கரும்பு ஜூஸ் பிழிபவரிடம் கரும்பு ஜூஸ் பிழிந்து வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில் நேற்று சிலுவத்தூர், மடூர், புகையிலைப்பட்டி அதிகாரிபட்டி, போன்ற கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திலகபாமா, நத்தம் அருகே தம்பக் குளத்துப்பட்டி பகுதியில் சாலையின் ஓரத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் பெண்கள் நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு சென்ற திலகபாமா அவர்களுடன் இணைந்து நாற்று நடவு செய்து கிராமிய பாடல் பாடிவிட்டு, மாம்பழத்திற்கு ஓட்டு போடுங்கள் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதனிடையே பிரச்சாரத்தின் போது பேசிய திலகபாமா, விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் கருணாநிதி என்று கடுமையாக விமர்சித்தார். அதற்கு உதாரணம் ஒருமுறை ரேசன் கடையில் மூட்டைகளில் இருந்த சீனி காணாமல் போனது குறித்து கருணாநிதியிடம் கேட்டதற்கு சீனியை எறும்பு தின்று விட்டது என்று கூறினார். சரி சீனியை காணவில்லை என்றால் அந்த சாக்கு பைகள் எங்கே இருக்கிறது என்று கேட்டதற்கு சாக்கு பையை கரையான் தின்றுவிட்டது என்று சாமர்த்தியமாக கருணாநிதி கூறினார் என்று திலகபாமா கடுமையாக விமர்சித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications