திண்டுக்கல் சங்கீதா.. 2வது திருமணம் பண்ண முடியுமா? முடியாதா? கொழுந்தனால் நொடியில் ஆடிப்போன நத்தம்
திண்டுக்கல்: 2வது திருமணம் செய்து வைக்கக்கோரி, எந்நேரமும் வீட்டில் நச்சரித்து கொண்டேயிருந்த நிலையில், திடீரென இப்படியொரு முடிவை எடுத்துள்ளார்... இது தொடர்பாக திண்டுக்கல நத்தம் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாகவே குடும்ப வன்முறைகள் தொடர்பாக 3000-க்கும் மேலான வழக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.. கணவரும் அவரது குடும்பத்தினரும் தரும் தொல்லைகள் தொடர்பாகவே பெரும்பாலான வழக்குகள் பதிவாகின்றன என்று காவல்துறையும் கூறியிருந்தது.

குடும்ப வன்முறைகளில், பாலியல் தொல்லை, மானபங்கம், வரதட்சணைக் கொடுமை, அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் இப்படி ஏராளமான வழக்குகளும் பதிவாகி வருகின்றன. நீதிமன்றமும், காவல்துறையும் பெண்களுக்கு ஆதரவாக விளங்கி கொண்டிருந்தாலும், குடும்ப வன்முறைகளில், பெரும்பாலும் பெண்களே உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.
திண்டுக்கல்: நேற்று திண்டுக்கல் மாவட்டத்திலும் ஒரு பெண்ணின் உயிர் அநியாயமாக பறிபோயிருக்கிறது.. திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியை சேர்ந்த வெள்ளையன் என்பவருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.. அண்ணன் பெயர் லட்சுமணன், தம்பி சுரேஷ்.
இவர்கள் இருவருமே வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், அண்ணன் லட்சுமணனுக்கு, சங்கீதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.. பிறகு, தம்பி சுரேஷுக்கு, கடந்த 4 வருடங்களுக்கு முன்பு, சங்கீதாவின் தங்கையையே திருமணம் செய்து வைத்தார்கள்.. இதற்குபிறகு, அண்ணன் தொடர்ந்து வெளிநாட்டிலேயே வேலை செய்து வந்தார். ஆனால், சுரேஷ், சொந்த ஊரிலேயே வசித்து வந்துள்ளார்.
தம்பதிகள்: ஆனால், சுரேஷ் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக, நாளுக்கு நாள் தகராறு அதிகமாகி கொண்டே வந்தது.. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவரின் மனைவி, சுரேஷிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுவிட்டார்.. இதற்கு பிறகு, சுரேஷ் தனிமையிலேயே வசித்து வந்தார்.
சமீபகாலமாக, தனக்கு 2வது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று, தன்னுடைய அப்பாவிடமும், அண்ணி சங்கீதாவிடமும் கேட்டு வந்தார்.. இதுவே நாளடைவில் தொல்லையாகிவிட்டது.. எந்நேரமும் 2வது கல்யாணம் செய்து வைய்யுங்கள் என்று நச்சரிக்க துவங்கிவிட்டார் சுரேஷ். அதேவேளையில், தன்னுடைய 2வது திருமணத்துக்கு, அண்ணியே தடையாக இருப்பதாகவும் சுரேஷ் தவறாக நினைத்து கொண்டு, சங்கீதா மீது கோபத்தில் இருந்துள்ளார்.
வாக்குவாதம்: சம்பவத்தன்று, சங்கீதா வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு சென்ற சுரேஷ், மீண்டும் 2வது திருமணம் பேச்சை எடுத்துள்ளார்.. அப்போது, சங்கீதாவுக்கும், சுரேஷுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது. இதில், உச்சக்கட்ட ஆத்திரமடைந்த சுரேஷ், வீட்டிலிருந்த அரிவாளால் சங்கீதாவை வெட்டிவிட்டார்.. சங்கீதாவின் தலை, கழுத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டார்.. அரிவாளால் வெட்டுப்பட்ட சங்கீதா, ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த நத்தம் போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சுரேஷையும் பிடிக்க வலை வீசியுள்ளனர்.. ஆனால், சுரேஷ் தன்னுடைய செல்போன், டெபிட் கார்டு போன்றவற்றை வீட்டிலேயே வைத்து விட்டு தப்பிவிட்டதால், அவரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது..
தீவிர முயற்சி: எனினும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள்.. 2வது திருமணம் செய்ய வலியுறுத்தி, அண்ணியை கொழுந்தனே வெட்டி கொன்ற சம்பவம் நத்தம் பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications