ஜெயலலிதா மரணம்- திண்டுக்கல் சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!
திண்டுக்கல்: ஸ்லோ பாய்சன் கொடுத்து ஜெயலலிதாவை கொலை செய்து விட்டனர் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:
கட்சி பாகுபாடு பார்க்காமல் அனைத்து தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனக்கு ஒரு கண் போனாலும் எதிரிக்கு 2 கண் போக வேண்டும் என தினகரன் நினைக்கிறார்.
[மது விற்பனையை நிறுத்தினால் குடிகாரர்கள் எதையாவது குடித்து உயிரிழப்பர்- ராஜேந்திர பாலாஜி ]

முயற்சி
ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு சசிகலா துணையாக இருந்ததை வைத்துக் கொண்டு அப்போது எல்லோரையும் மிரட்டியதை போல் தற்போதும் மிரட்டலாம் என பார்க்கிறார். இந்த ஆட்சி, கட்சியை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என ஸ்டாலினுடன் கூட்டணி சேர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

கொலை
சர்க்கரை நோயாளியாக இருந்த ஜெயலலிதாவிற்கு எதைக் கொடுக்ககூடாதோ அதை வேண்டுமென்றே கொடுத்து ஸ்லோ பாய்சன் கொடுப்பது போல அவரை சசிகலா குடும்பத்தினர் கொலை செய்து விட்டனர்.

நாடியவர்
இப்போது அவர்கள் உத்தமர் போல பேசி வருகிறார்கள். ஜெயலலிதாவின் வாரிசே நான்தான் என தினகரன் கூறி வருகிறார். வழக்கில் இருந்து விடுபடுவதற்காக ஜெயலலிதாவை சிக்கவைத்து விட்டு கருணாநிதி உதவியை நாடியவர் தினகரன்.

ஜெ. அனுமதிக்கவில்லை
அதனால்தான் ஜெயலலிதா தான் உயிரோடு இருந்தவரை அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவே இல்லை. அவரால் அ.தி.மு.க அரசை ஒன்றும் செய்ய முடியாது என்றார் திண்டுக்கல் சீனிவாசன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications