சீனிவாசனுக்கு கோபம் வந்து பார்த்தது இல்லையே நீங்க.. திண்டுக்கல்காரங்க நேத்து பாத்தாங்க!
திண்டுக்கல்: அமைச்சர் திண்டுக்கல்லார் டென்ஷன் ஆகி யாரும் பார்த்ததில்லையே... நேத்து அது நடந்துருச்சு!
ஏற்கனவே தோற்கக்கூடிய, வலுவில்லாத தொகுதியான திண்டுக்கல்லை தங்களுக்கு தந்துவிட்டார்களே என்று பாமக செம கடுப்பில் இருக்கிறார்கள். இதற்கு வேட்பாளர் கிடைப்பதே சிக்கல் ஆகி, கடைசி நேரத்தில் ஜோதிமுத்து என்பவர் அறிவிக்கப்பட்டார்.
இந்த தொகுதியில் கூட்டணியின் பிரசாரமும் ஆரம்பமாகிவிட்டது. வேட்பாளரை அறிமுகப்படுத்திவிட்டு, பிரச்சாரம் செய்யலாம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வந்திருந்தார். குமரன் திருநகரில் அதிமுக பாமக வேட்பாளர் ஜோதிமுத்துக்கு வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
[39 தொகுதிகளும் நுனி விரலில்.. ஒன்இந்தியா தமிழில்]

தாமரை சின்னம்
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான போஸ் உட்பட ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரண்டிருந்தனர். பாமகவுக்கு மாம்பழம் சின்னத்தில் ஓட்டு போடும்படி ஒவ்வொருவராக கேட்டுக் கொண்டனர். அப்போது கூட்டணி சார்பாக போஸ் பேச ஆரம்பித்தார்.

மாம்பழம்
என்ன நினைப்பில் இருந்தாரோ தெரியவில்லை.. திடீரென பாமக வேட்பாளருக்கு "தாமரை சின்னத்தில் மறக்காம ஓட்டு போடுங்க" என்றார். இதை கேட்டதும் அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி ஆனார்கள். இன்னொரு பக்கம் கூடியிருந்த மக்கள் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். உடனே மக்களே, "சார்.. சின்னத்தை மாத்தி சொல்றீங்க பாருங்க.. தாமரைக்கு கேக்கறீங்க.. மாம்பழத்துக்கு கேளுங்க" என்று சிரித்து கொண்டே சென்றனர்.

போஸ்க்கு டோஸ்
இதையெல்லாம் பார்த்து திண்டுக்கல்லாரோ, டென்ஷனே ஆகிவிட்டார். அக்கம் பக்கம் யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்கவில்லையே... அங்கேயே போஸ்-க்கு டோஸ் விழ ஆரம்பித்து விட்டது. அமைச்சர் சீனிவாசன் ரெய்டு விட ஆரம்பித்ததை பார்த்ததும் கூட்டத்தில் எல்லோருமே விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

அமர்க்களம்
ஏற்கனவே திண்டுக்கல் தொகுதி ஏழரையாக இருக்கிறது.. இதில் முதல் பிரச்சாரமே இப்படி அமர்க்களமாகி விட்டதே என்று நொந்து கொண்டது கூட்டம்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications